தி. சி. திம்மராய கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி. சி. திம்மராய கவுண்டர் (T. C. Thimmaraya Gounder)(பிறப்பு 15 திசம்பர், 1915) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் வேலூர் மாவட்டம் ஆத்தூர் குப்பம் பகுதியினைச் சேர்ந்தவர். இவர் நாட்டறம்பள்ளி உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். திம்மராய கவுண்டர், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1967[1] மற்றும் 1971ஆம்[2] ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக நாட்ராம்பள்ளி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[3]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1967 நாட்ராம்பள்ளி திமுக 29,215 52.18
1971 நாட்ராம்பள்ளி திமுக 33,303 53.33

மேற்கோள்கள்[தொகு]

  1. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
  3. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 410. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._சி._திம்மராய_கவுண்டர்&oldid=3538165" இலிருந்து மீள்விக்கப்பட்டது