தி. கா. இராமாநுசக்கவிராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி. கா. இராமாநுசக்கவிராயர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். வினோபா பாவின் "பூமிதான இயக்கத்திற்கு" அன்றைய ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்திலேயே மிக அதிகமாக நிலம் வழங்கிய கொடைவள்ளலாகத் திகழ்ந்தவர்.

சிறுவயது முதலே தமிழிலும் ஆங்கிலத்திலும் பா புனையும் திறமை கைவரப்பெற்றிருந்தார். பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் பாடல்கள் கொண்ட 'மகாத்துமா காந்தி காவியத்தை' எழுதிப் புகழ் பெற்றதால் 'காந்தி காவியம்' கவிராயர் என அறியப்பட்டவர்.

கட்டபொம்மன் காதை, பூதள வெண்பா ஆகிய பல தமிழ் நூல்களையும் 'Man and Mathematics' முதலிய பல ஆங்கில நூல்களையும் எழுதியவர்.

இவருடைய மகன் தி. இரா. கள்ளப்பிரான் பாண்டியன் கிராம வங்கியின் நிறுவனப் பெருந்தலைவராகவும் இந்தியன் ஓவர்சீசு வங்கியின் துணைப்பொதுமேலாளராகவும் திகழ்ந்தவர்; தி.இரா.க. மேலாண்மைப் பார்வையில் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவர் எழுதிய 'வெற்றிக்கு வழிகாட்டும் மேலாண்மை' நூல் தமிழ் கூறும் நல்லுலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தி. இரா. க. தற்போது திருநெல்வேலி நகரத்தில் வாழ்ந்து வருகிறார்.