தி. அன்பழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தி. அன்பழகன் (T. Anbazhagan) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் வேலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியிலுள்ள காட்டூர் கிராமத்தினைச் சார்ந்தவர். அன்பழகன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக நாட்ராம்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு 1977, 1980 மற்றும் 1984 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவிவகித்தார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._அன்பழகன்&oldid=3557859" இருந்து மீள்விக்கப்பட்டது