திஷ்யரட்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திஷ்யரட்சா

ராணி திஷ்யரக்ஷா (Tishyaraksha, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு) என்பவர் மூன்றாவது மௌரிய பேரரசர் அசோகரின் கடைசி மனைவி ஆவார். அசோகவதனம் நூலின் கூற்றுப்படி, அசோகனின் மகனும், அவரின் வாரிசான குணாளனின் கண் பார்வை பறிபோக காரணமானவள். [1]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

திஷியரக்ஷதா அசோகரின் பட்டத்து ராணியான ஆசந்திமித்ராவின் விருப்பமான பணிப்பெண் என்று நம்பப்படுகிறது. மேலும் இவர் தன் எஜமானி இறந்த பிறகு, இவர் பாடலிபுத்ரத்துக்குச் சென்று நடனக் கலையைக் கற்று ஒரு சிறந்த நடனக் கலைஞராக மாறி அசோகரை தனது நடனம் மற்றும் அழகால் கவர்ந்தார். பின்னர், இவர் மன்னர் அசோகருடைய காமக்கிழத்தியானார். அசோகரின் பிற்கால வாழ்க்கையில் இவர் அசோகரின் உடல்நிலையையும் கவனித்துக் கொண்டார்.[சான்று தேவை]

குணாளன்[தொகு]

திஷியரக்ஷதாவுக்கும் அசோகருக்கும் இடையிலான வயது வேறுபாடு காரணமாக, இவர் அசோகரின் மகனான குணாளனை நோக்கி கவரப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது. இவர் தன் சிற்றன்னையாக இருப்பதால் இவரின் ஆசைக்கு இணங்க மறுத்தார். மேலும் திஷ்யரக்ஷாவை தனது தாயின் இடத்தில் வைத்து குணாளன் மதித்தார். குணாளனால் நிராகரிக்கப்பட்டதால் திஷ்யரக்தாஷ மிகுந்த ஆத்திரம் அடைந்தார். இதனால் குணாளனை பழிவாங்க அவரை குருடாக்க முடிவு செய்தார். குணாளனின் கண்கள் கவர்ச்சிகரமானதாகவும் அழகாகவும் இருந்தன என்றும் அவைதான் முதலில் திஷ்யரக்தாஷாவை ஈர்த்தன என்றும் நம்பப்படுகிறது.   .

சதி[தொகு]

மௌரியப் பேரரசில் சந்திரகுப்த சபையானது ராதாகுப்தர் (அப்போதைய அமைச்சர் (மகாமத்யா) தலைமையில் கூடியது. அப்போது தக்சசீலத்தில் கிளர்ச்சி உருவாகி இருந்தது. அந்தக் கிளர்ச்சியைத் தணிக்க குணாளனை அனுப்பலாம் என்று ராதகுப்தர் தலைமையிலான சந்திரகுப்த சபை முடிவு செய்தது. இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி திஷ்யராக்ஷாதா ஒரு சதித்திட்டத்தை தீட்டினார். அதில் குணாளனை சிக்கவைக்க முடிவு செய்தார்.

சதித்திட்டத்தின்படி, அசோகர் தட்சசீலத்தின் ஆளுநரிடமிருந்து மிகவும் விலைமதிப்பற்ற இரண்டு நகைகளை கோர வேண்டியிருந்தது, அவை மிகவும் அரியவை என்று நம்பப்படுகிறது. திஷ்யரக்ஷாதாவால் சூசகமான மொழியில் எழுதப்பட்ட கடிதமானது அசோகரால் அனுப்பப்பட்டது. அசோகர் கடித வரிகளில் மறைந்துள்ள சூசக பொருளைப் புரிந்து கொள்ளவாமலே அதை குனாளனுக்கு அனுப்பிவிட்டார். அசோகர் மறை பொருளை அறியாமல் சாதாரணமாக அனுப்பிய கடிதமானது குணாளனை அடைந்தது. கடிதத்தைப் படித்த குணாளன் கடிதத்தில் மறைந்துள்ள சூசக பொருளை உடனடியாக புரிந்து கொண்டார். குணாளன் தனது தந்தை மீது கொண்டுள்ள அன்பு மற்றும் மகத நாடு மீதான விசுவாசம் காரணமாக, அவர் தனது கண்களை அகற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். [2] பின்னர் அவர் தனது இரு கண்களையும் படாலிபுத்திரத்தின் உள்ள மகத அரசவைக்கு அனுப்பினார். அசோகர் தனது தவறை உணர்ந்தார், என்றாலும் அதற்குள் காலம் கடந்துவிட்டது. உடனே ராதாகுப்தர் திஷ்யரக்ஷதாவைவுக்கு மரண தண்டனை அளித்து உத்தரவிட்டார். இருப்பினும், இந்த செய்தியைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்று அறிந்த பின்னர் திஷ்யரக்தாஷ தற்கொலை செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.[சான்று தேவை]  


பரவலர் பண்பாட்டில்[தொகு]

ஹரபிரசாத் சாஸ்திரியின் இரண்டாவது புதினமான "காஞ்சன்மாலா" திஷ்யரக்ஷத்தை ஒரு முக்கிய பாத்திரத்திரமாக கொண்டுள்ளது. திஷ்யரக்ஷாவின் கதையை பெங்காலி எழுத்தாளர் சமரேஷ் மஜும்தார் தனது "சரணகதா" புதினத்தில் கருப்பொருளாக கொண்டு எழுதியுள்ளார், இதில் அசோகரின் வாழ்க்கையை மிகவும் மாறுபட்ட ஒரு கோணத்தில் சித்தரித்துள்ளார். இதே கதையை பிரபல வங்காள நாடக ஆசிரியர் அமித் மைத்ரா 'தர்மஷோக்' என்ற பெயரில் நாடகமாக உருவாக்கினார்.[சான்று தேவை] இந்தக் கதையைத் தழுவி தமிழில் சாரங்கதரா என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திஷ்யரட்சா&oldid=2929940" இருந்து மீள்விக்கப்பட்டது