திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


"Divya Prabantha Manimalaigal 108" book side view. This book is authored by Meivazhi Ilam Kalaikottu Ananthar

'பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் திருவோங்கும் புகழ் போற்றும் திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108', என்பது அருட்பாவலர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் அவர்களால் இயற்றப் பெற்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அந்நாள் துணை வேந்தர், முனைவர். க. பாஸ்கரன் அவர்களால்  1.11.2017 அன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப் பெற்ற சிற்றிலக்கிய நூல் ஆகும்.[1] இந்நூல் தமிழ் கூறும் நல்லுலகின் சரித்திரத்தில் இதுவரை இல்லாத பல சாதனைகளை படைத்த நூலாகக் குறிப்பிடப்பெறுகிறது.[2][3]

சரித்திர சாதனை நூலைப் பற்றி...[தொகு]

உயர்தனிச் செம்மொழியாகிய செந்தமிழில் 96 வகை சிற்றிலக்கியங்களுக்கு (பிரபந்தங்களுக்கு) இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளன.

"Divya Prabantha Manimalaigal 108" book front cover
படிமம்:Divya Prabandha Manimalaigal Book Back.jpg
"Divya Prabantha Manimalaigal 108" book back cover. This book is authored by Meivazhi Ilam Kalaikottu Ananthar

நூலின் நோக்கம்[தொகு]

 • மனித குலம், பெண் - மண் - பொன் ஆசை கடந்து,  விண் ஆசை கொண்டு பிறவிப்பெருங்கடல் நீந்தி இறைவனடி சேர, சாதி, மத, சாத்திர பேதம் அற்று ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்னும் சமரச கொள்கை மெய் நெறி வாழ்வில் தன்னை ஆக்கிவைத்த தனது குருபெருமான் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்களை பாட்டுடைத்தலைவராகக் கொண்டு, 108 பிரபந்தங்களையும் இயற்றியுள்ளதாகவும்,
 • தமிழ் மொழி மீது பற்றும் பேரார்வமும் கொண்டுள்ள  யாவரும்  படித்து இன்புறவும், மாணவர்கள் சிற்றிலக்கியங்களை எளிமையாகக் கற்றுணரவும், செந்தமிழின் எழிலையும், வளமையையும், தொன்மையும், இலக்கிய வளம் கொழிக்கும் தனித்தன்மையையும் உலகோர் மேலும் அறிந்து, மெய்ந்நெறி உணர்ந்து, அதன் வழி நடந்து நீடூழி வாழ்ந்திடுவதற்கும் இந்நூல் துணைபுரியும் என்றும் இந்நூலாசிரியர் மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் குறிப்பிடுகின்றார்.[2][3][4]

நூல் நிரல் அட்டவணை[தொகு]

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் நூலின் பனுவலும் பாவினமும்
வ.எண் சிற்றிலக்கிய வகை சிற்றிலக்கியத்தின் பெயர் இயற்றப்பெற்ற பாவினம்
1 அங்கமாலை திரு அங்கமாலை கலிவெண்பா
2 அட்டகம் திரு அட்டகம் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3 அட்ட மங்கலம் திரு அட்ட மங்கலம் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
✫4 அனுராக மாலை ஆன்மராக மாலை நேரிசை வெண்பா, கலிவெண்பா
5 அம்மானை திரு அம்மானை தரவு கொச்சகக் கலிப்பா
✫6 அரசன் விருத்தம் ஞானப் பேரரசர் திருவிருத்தம் கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை
7 அலங்கார பஞ்சகம் அண்ணல் அலங்கார பஞ்சகம் கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
8 ஆற்றுப்படை திருவருட்சாலை ஆற்றுப்படை நேரிசை ஆசிரியப்பா
9 இணைமணிமாலை திருஇணைமணிமாலை நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை,
10 இயன்மொழி வாழ்த்து அருள் இயன்மொழி வாழ்த்து நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா
11 இரட்டைமணி மாலை திரு இரட்டைமணி மாலை நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா
12 இருபா இருபஃது அருள் இருபா இருபஃது நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா
13 உந்தியார் திரு உந்தியார் நேரிசை வெண்பா,
14 உலா திரு உலா நேரிசை வெண்பா, கலிவெண்பா
15 உலா மடல் திரு உலா மடல் நேரிசை வெண்பா, கலிவெண்பா
✫16 உழத்திப் பாட்டு மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு நேரிசை வெண்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், தென்பாங்கு, சிந்து ,ஆனந்தக் களிப்பு
✫17 உழிஞை மாலை கலியை வெல் உழிஞை மாலை கலிவிருத்தம்
✫18 உற்பவ மாலை அருள் உற்பவ மாலை நேரிசை வெண்பா, பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
19 ஊசல் திருப்பொன்னூஞ்சல் எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
20 ஊர் இன்னிசை வெண்பா திருவூர் இன்னிசை வெண்பா இன்னிசை வெண்பா
21 ஊர் நேரிசை வெண்பா திருவூர் நேரிசை வெண்பா நேரிசை வெண்பா
22 ஊர் வெண்பா திருவூர் வெண்பா சிந்தியல் வெண்பா
23 எண் செய்யுள் அருள் எண் செய்யுள் கலித்தாழிசைF
24 எழுகூற்றிருக்கை திருஎழுகூற்றிருக்கை நிலைமண்டில ஆசிரியப்பா,
25 ஐந்திணைச் செய்யுள் மெய்யூர் ஐந்திணைச் செய்யுள் நேரிசை ஆசிரியப்பா,
26 ஒருபா ஒருபஃது திரு ஒருபா ஒருபஃது பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
27 ஒலியந்தாதி திரு ஒலியந்தாதி திருப்புகழ்ச் சந்தம்
✫28 கடிகை வெண்பா நற்கடிகை வெண்பா நேரிசை வெண்பா
✫29 கடைநிலை வான் கடைநிலை நேரிசை வெண்பா, நிலைமண்டில ஆசிரியப்பா,
✫30 கண்படை நிலை திருக்கண்படை நிலை கலித்தாழிசை, கலிவிருத்தம்
31 கலம்பகம் சாலைக் கலம்பகம் பாவும் பாவினங்கள் அனைத்தும்
✫32 காஞ்சி மாலை நன்காஞ்சி மாலை நேரிசை வெண்பா, கலிவிருத்தம்
33 காப்பியம் தெய்வ காப்பியம் கலிவிருத்தம், 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
34 காப்பு மாலை திருக் காப்பு மாலை பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
35 காவடிச் சிந்து பூவடிப் போற்றிகள் சந்தப் பாடல்கள்
36 கும்மி விண்பாங்கரசர் தென்பாங்கு கும்மிப் பாடல் சந்தம்
37 குழமகன் ஞானக் குழமகன் கலி வெண்பா
38 குறத்திப்பாட்டு ஊறல்மலைக் குறமங்கை 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,கீர்த்தனைகள், சந்தப் பாடல்கள்
39 கேசாதி பாதம் எழில் மணிமுடி திருமலரடி வண்ணம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
✫40 கைக்கிளை அருட் கைக்கிளை நேரிசை வெண்பா
41 கையறு நிலை மெய் பெறு நிலை மருட்பா
42 கோவை திருவருட்கோவை கட்டளைக் கலித்துறை
43 சதகம் திருச்சதகம் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
44 சாதகம் அருட் சாதகம் பல்வகைப் பாசுரங்கள்
45 சின்னப்பூ வண்ணப்பூ நேரிசை வெண்பா
✫46 செருக்களவஞ்சி அறக்களவஞ்சி வஞ்சி நிலை விருத்தம்
47 செய்ந்நன்றி சாற்று செய்ந்நன்றி சாற்று கலித்தாழிசை
48 செவியறிவுறூஉ திருச் செவியறிவுறூஉ மருட்பா
49 தசாங்கம் திருத்தசாங்கம் கலி வெண்பா
✫50 தசாங்கத்தயல் திருத்தசாங்கத்தயல் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
51 தண்டக மாலை அருள் தண்டக மாலை நேரிசை வெண்பா
52 தாண்டகம் அறம் வேண்டகம் அறுசீர், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
✫53 தாரகை மாலை ஒளிர் தாரகை மாலை நேரிசை வெண்பா
✫54 தானை மாலை அருட்சேனை மாலை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
55, திருக்கண்ணெழில் திருக்கண்ணெழில் நேரிசை வெண்பா
56 திருவருளெம்பாவை தெய்வத் திருவருளெம்பாவை கொச்சகக் கலிப்பா
✫57 தும்பை மாலை அறப்போர் மாலை கலிவிருத்தம்
58 துயிலெடை நிலை அறிதுயிலெடை நிலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
59 தூது அன்பு விடு தூது கலி வெண்பா
60 தொகைச் செய்யுள் நற்றொகைச் செய்யுள் நேரிசை ஆசிரியப்பா
✫61 நயனப் பத்து அருள் நயனப் பத்து கட்டளைக் கலித்துறை
62 நவமணிமாலை எழில் நவமணிமாலை பல்வகைப் பாசுரங்கள்
63 நவரத்தின மாலை சிவரத்தின மாலை பல்வகைப் பாசுரங்கள்
64 நாம மாலை திரு நாம மாலை குறளடி, சிந்தடி வஞ்சிப்பாக்கள்
65 நாற்பது அறம் நாற்பது நேரிசை வெண்பா
66 நான்மணி மாலை வான்மதியரசர் நான்மணி மாலை வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம்
67 அருள் நூற்றந்தாதி அருள் நூற்றந்தாதி கட்டளைக் கலித்துறை
✫68 நொச்சி மாலை நறு நொச்சி மாலை கலிவிருத்தம்
69 பண்ணலங்காரம் பொன்னரங்கர் பண்ணலங்காரம் பல்வகைப் பாவினங்கள்
70 பதிகம் தெய்வமணிப் பதிகம் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நேரிசை வெண்பா
71 பதிற்றந்தாதி அருட் பதிற்றந்தாதி நேரிசை வெண்பா
✫72 பயோதரப் பத்து அமுத பயோதரப் பத்து கட்டளைக் கலித்துறை
73 பரணி யுக உதயப் பரணி கலித்தாழிசை, சந்தப் பாடல்கள்
74 பல் சந்த மாலை நல் சந்த மாலை பல்வகைப் பாவினங்கள்
✫75 பவனிக் காதல் திரு பவனிக் காதல் கலி வெண்பா
76 பள்ளு சாலையூர்ப் பள்ளு பல்வகைப் பாவினங்கள்
77 பன்மணிமாலை நன்மதியரசர் பன்மணிமாலை பல்வகைப் பாவினங்கள்
78 பாதாதி கேசம் குரு திருவடி எழில் மணிமுடி கலித்தாழிசை
79 பிள்ளைத் தமிழ் அருள்ஞானப் பிள்ளைத் தமிழ் பன்னிருசீர், பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
80 புகழ்ச்சி மாலை மெய்ப்புகழ்ச்சி மாலை குறளடி வஞ்சிப்பா
✫81 புறநிலை திருப் புறநிலை மருட்பா
✫82 புறநிலை வாழ்த்து அருள் புறநிலை வாழ்த்து மருட்பா
83 பெயர் இன்னிசை வெண்பா திருப்பெயர் இன்னிசை வெண்பா இன்னிசை வெண்பா
84 பெயர் நேரிசை வெண்பா திருப்பெயர் நேரிசை வெண்பா நேரிசை வெண்பா
85 பெருங்காப்பியம் தவத்ததிகாரம் நேரிசை ஆசிரியப்பா மற்றும் பல்வகைப் பாவினங்கள்
✫86 பெருமகிழ்ச்சி மாலை அருட்பெருமகிழ்ச்சி மாலை கட்டளைக் கலித்துறை
✫87 பெருமங்கலம் திருப்பெருமங்கலம் கலி வெண்பா
✫88 போர்க்கெழுவஞ்சி அறப்போர்க்கெழுவஞ்சி வஞ்சி நிலைத்துறை
89 நித்திய மங்கல வள்ளை நித்திய மங்கல வள்ளை வெண்பா
90 மடல் திருமடல் கலி வெண்பா
91 மணிமாலை மெய்ப்பொருள் மணிமாலை நேரிசை வெண்பா, கலித்தாழிசை
92 முதுகாஞ்சி மெய் முதுகாஞ்சி நிலைமண்டில ஆசிரியப்பா,
93 மும்மணிக் கோவை இறைதிரு மும்மணிக் கோவை நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா
94 மும்மணி மாலை அருள் மும்மணி மாலை நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா
95 மெய்க் கீர்த்தி தவ மெய்க் கீர்த்தி ஆசிரியப்பா
✫96 வசந்த மாலை நல் வசந்த மாலை பஃறொடை வெண்பா
✫97 வரலாற்று வஞ்சி திருவரலாற்று வஞ்சி வஞ்சி நிலைத்துறை
98 வருக்கக் கோவை மறலியை வெல் வருக்கக் கோவை கட்டளைக் கலித்துறை
99 வருக்க மாலை உயர் வருக்க மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
✫ 100 வாகை மாலை கலியை வெல் வாகை மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
✫ 101 வாதோரண மஞ்சரி அருள் வாதோரண மஞ்சரி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
102 வாயுறை வாழ்த்து திருவாயுறை வாழ்த்து நேரிசை ஆசிரியப்பா
103 விருத்தம் திரு விருத்தம் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
104 விளக்கு நிலை ஞான விளக்கு நிலை மருட்பா
✫ 105 வீர வெட்சி மாலை வீர வெட்சி மாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
✫ 106 வெற்றிக் கரந்தை மஞ்சரி வெற்றிக் கரந்தை மஞ்சரி அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
107 வெற்றி மணி மாலை வெற்றி மணி மாலை அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
✫ 108 வேனில் மாலை இதயம் நெகிழ் மாலை கலி வெண்பா


✫ இந்நூலில் இலக்கணம் மட்டுமே உள்ள பிரபந்தங்களுக்கு புதிய இலக்கியம் இயற்றப் பெற்றவை[தொகு]

96 சிற்றிலக்கியங்களுடன் புதிதாக இந்நூலில் சேர்க்கப் பெற்ற இலக்கியங்கள்[தொகு]

நூல் முன்னுரை[தொகு]

 • இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியர், மெய்வழிச்சபையின் சபைக்கரசர் மெய்வழி சாலை வர்க்கவான் அவர்கள்;
 • அணிந்துரை வழங்கியர், அந்நாள் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் க.பாஸ்கரன் அவர்கள்;
 • மதிப்புரை வழங்கியர், அந்நாள் தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத்துறை தலைவி  முனைவர் க.திலகவதி அம்மையார் அவர்கள்;
 • முன்னுரை  வழங்கியர் முனைவர் சரசுவதி இராமநாதன் அம்மையார் அவர்கள்;[2]
 • இனியஉரை வழங்கியர் முனைவர் பொன்.சுசீலா அம்மையார் அவர்கள்.

நூல் ஆசிரியர் பற்றி[தொகு]

படிமம்:Meivazhi Ilam Kalai Kottu Ananthar Pic.png
Meivazhi IlamKalaiKottu Ananthar Author of the book "Divya Prabantha Manimalaigal 108"

இந்நூல் ஆசிரியரின் இயற்பெயர் அ.மு.சண்முகம். தந்தையார் மெய்வழி முத்துசாமி, தாயார் மெய்வழி காளியம்மா. நாமக்கல் மாவட்டம் அரசம்பாளையம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். தூலத் துணைவியார் மெய்வழி சௌந்தரவல்லி அனந்தகி. 1957 முதல் 1996 முடிய 39 ஆண்டுகள் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான நல்லாசிரியர்' விருது பெற்றவர்.

 • இளம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் இயற்கையாக அமைந்திருந்ததால், தன்னை ஆண்டு கொண்ட குருபிரானின் அளக்கரிய கருணையைப், போற்றுதற்குரிய பெருமையைக் கவிதைகளாகவே எழுதியெழுதிக் குவித்து வைத்திருப்பவர்.
 • இவர் எழுதி இதுவரை வெளிவந்துள்ள நூல்களில் உரைநடை நூல்கள் - 2, கவிதை நூல்கள் - 2, கர்நாடக சங்கீத கீர்த்தனை நூல் - 1, வில்லுப் பாட்டு -1. இவரின் திறமையை சிறப்பிக்கும் வகையில் தமிழறிஞர்களால் இவருக்கு வழங்கப்பெற்ற பட்டங்கள்: அருட்பாவலர், சங்கீத சிரோன்மணி, தெய்வத் தமிழிசைப் பாவாணர், இறையருட் கவிஞர் , இறைநயக்கவிஞர் மற்றும் சிசரம் தொடும் செம்மல் முதலியன.
 • 108 சிற்றிலக்கியங்களையும், ஒரே புலவர், ஒருவரை மட்டுமே பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுதி வெளியிட்டிருப்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதன் முறையாகும். தமிழ் இலக்கிய உலகிற்கு புது வரவு. இந்த மாபெரும் சாதனையை ஈராண்டு காலத்திற்குள் தமது 80ஆம் வயதில் நிறைவேற்றியுள்ளார்.

நூலாசிரியர் பெற்ற விருதுகளும் பட்டங்களும்[தொகு]

மதுரை உலகத்தமிழ்ச் சங்கம், மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தருக்கு, 'செம்மொழித் தமிழ் சிற்றிலக்கிய வேந்தர்' என்னும் பட்டமும் பதக்கமும் வழங்கிய நிகழ்வு
அட்டவணை
விருதுகள் / பட்டங்கள் பெற்ற தேதி விருது வழங்கியவர்கள் இடம்
மாநில நல்லாசிரியர் 05.09.1980 அந்நாள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திருவாளர் M.G. ராமச்சந்திரன் அவர்கள் வள்ளுவர் கோட்டம்
சிறந்த ஆசிரியர் 1980 அந்நாள் மாண்புமிகு கல்வி அமைச்சர். திருவாளர் அரங்கநாயகம் அவர்கள் சங்கம் தியேட்டர், சேலம்
அருட்பாவலர் 14.02.2000 சென்னைவாழ் தமிழ் அறிஞர்கள், சென்னை சென்னைவாழ் அனந்தாதி தேவர்கள் கே.கே நகர், சென்னை
இறையருட்கவிஞர் 17.04.2004 இலக்கியப் பேரவை, புதுக்கோட்டை புதுக்கோட்டை
இறைவள கவிஞர் 12.12.2004 இலக்கியப் பேரவை, புதுக்கோட்டை புதுக்கோட்டை
தேவநேயப் பாவலர் 12.12.2004 இலக்கியப் பேரவை, புதுக்கோட்டை புதுக்கோட்டை
கீர்த்தனை சிரோமணி 15.09.2009 சத்குரு சங்கம், வில்லிவாக்கம் சென்னை
தெய்வத்தமிழிசைப் பாவாணர் 15.09.2009 கண்ணதாசன் கலை இலக்கிய மன்றம் வில்லிவாக்கம், சென்னை
சிகரம் தொடும் செம்மல் - இலக்கியப் பேரவை, புதுக்கோட்டை புதுக்கோட்டை
சிந்தனைச் சிகரம் 13.12.2017 மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை
பாராட்டுப் பட்டயம் 26.01.2018 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்
சிற்றிலக்கிய வேந்தர் பட்டம், பொற்கிழி வழங்கப்பட்டது - ஜெயங்கொண்ட அலமேலு இராமலிங்கம் மற்றும் சோழபுரம் அறக்கட்டளை, ஜெயங்கொண்ட சோழபுரம்
செம்மொழித் தமிழ் சிற்றிலக்கிய வேந்தர் பட்டம், பொற்கிழி, பரிசுப் பதக்கம் வழங்கப்பட்டது 13.06.2019 இயக்குநர், உலகத்தமிழ்ச் சங்கம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
சிற்றிலக்கிய மகாகவி விருது[5] 12.02.2020 அனைத்துலகத் தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாடு, தமிழ் மாண்புமிகு க.பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைஅமைச்சர், தமிழ்நாடு அரசு டி.ஜி.வைணவக் கல்லூரி, சென்னை
மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் தம்பதிகள்


நூலாசிரியர் இயற்றிய நூல்கள்[தொகு]

படிமம்:Divya Potri Malargal, Divya Prabantha Thirattu Book Release.jpg
திவ்வியப் போற்றி மலர்கள் மற்றும் திவ்வியப் பிரபந்தத் திரட்டு நூல்கள் வெளியீடு

மரபுக் கவிதை நூல்கள்

 1. திவ்வியப் போற்றி மலர்கள்
 2. திவ்வியப் பிரபந்தத் திரட்டு
 3. தெய்வப் பிரபந்த மணிகள்
 4. தெய்வக் கீர்த்தனைகள்
 5. பிரம்மப் பிரகாச மெய்வழிச்சாலை ஆண்டவர்களின் திருவோங்கும் புகழ் போற்றும் திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108

பாடல் நூல்

 1. வில்லுப் பாட்டு

உரைநடை நூல்கள்

 1. பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் திருவரலாறு
 2. ஸ்ரீவித்துநாயகம் மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் மகாமகத்துவம்

இந்நூலுக்கு நற்றுணை நல்கிய நன்னூல்கள்[தொகு]

வேத வேதாந்தங்கள்

 1. ஆதிமெய் உதய பூரண வேதாந்தம் - பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்
 2. ஆண்டவர்கள் மான்மியம் - பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்
 3. எமபடர் அடிபடு கோடாயிதக்கூர் - பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்
 4. எமபடர் அடிபடு திரு மெய்ஞ்ஞானக் கொரல் - பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்
 5. வான்மதிக் கொரல் - பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்
 6. தேவாரங்கள் - திருஞான சம்பந்தப் பெருமான், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார்
 7. திருவாசகம் - மாணிக்கவாசக பிரானவர்கள்
 8. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் -  ஆழ்வார்கள்
 9. சத்திய வேதம் - இயேசு பெருமான் உள்ளிட்ட செம்மல்கள்
 10. திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் பெருமானார்
 11. தம்மபதம் - புத்தபகவான்
 12. குமரகுருபரர் பிரபந்தத் திரட்டு  - ஸ்ரீ குமரகுருபரர்  சுவாமிகள்
 13. திருவருட்பா ஆறு திருமுறைகள் - வடலூர் வள்ளல் பெருமான்
 14. பதினான்கு சைவ சித்தாந்த சாஸ்திரங்கள்மெய்கண்டார், திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார், சிவப்பிரகாசர், உமாபதிசிவாச்சாரியார்

இலக்கண நூல்கள்

 1. தொல்காப்பியம் - தொல்காப்பியர்
 2. நன்னூல் - பவனந்திமுனிவர்
 3. யாப்பருங்கலக்காரிகை - அமிதசாகரர்
 4. யாப்பருங்கலவிருத்தி - அமிதசாகரர்
 5. தண்டியலங்காரம் - தண்டியாசிரியர்
 6. மாறனலங்காரம் - திருக்குருகைப்பெருமாள் கவிராயர்
 7. பன்னிரு பாட்டியல் - பலபுலவர்கள் தொகுத்தது
 8. வெண்பாப் பாட்டியல் (எ) வச்சனந்திமாலை - வச்சனந்தி
 9. நவநீதப் பாட்டியல் -  நவநீத நடனார்
 10. சிதம்பரப் பாட்டியல் - பரஞ்சோதியார்
 11. இலக்கண விளக்கம் (குட்டித் தொல்காப்பியம்)  - திருவாரூர் வைத்திய நாத தேசிகர்
 12. பிரபந்த மரபியல்
 13. முத்து வீரியம் - முத்து வீர உபாத்தியாயர்
 14. தொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்
 15. பிரபந்த தீபிகை - பாப்புவையர் என்னும் முத்துவேங்கட சுப்பையர்
 16. சுவாமி நாதம் - சுவாமிகவிராயர்
 17. சம்பந்தப் பாட்டியல் (எ) வரையறுத்த பாட்டியல் - சம்பந்த முனிவர்

இலக்கிய  நூல்கள்

 1. சிலப்பதிகாரம் - இளங்கோவடிகள்
 2. கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்
 3. முக்கூடற் பள்ளு
 4. திருச்செங்கோட்டுப் பள்ளு
 5. திருக்குற்றாலக்குறவஞ்சி - திரிகூடராசப்ப கவிராயர்
 6. ஒலியந்தாதி - பாம்பன் குருதாச சாமிகள்
 7. வருக்கக்கோவை - படிக்காசுப்புலவர்
 8. கச்சிக் கலம்பகம் - பூண்டி அரங்கநாத முதலியார்

ஜோதிட நூல்கள்

 1. சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி - திரிசிரபுரம் கா.இராமசாமிப்பிள்ளை
 2. சாதக அலங்காரம் - அம்பலவாண தேசிகர்
 3. குமாரசுவாமியம் - குமாரசாமி தேசிகர்
 4. ஜோதிட அரிச்சுவடி - நித்தியானந்த ஜோதிடர்

அகராதிகள்

 1. மதுரைத் தமிழ்ப்பேரகராதி
 2. அபிதான சிந்தாமணி
 3. கதிரைவேற்பிள்ளை தமிழகராதி

சிற்றிலக்கிய ஆராய்ச்சி 2 பாகங்கள் - பேராசிரியர் முனைவர் கண்ணன்மேற்கோள்கள்[தொகு]

 1. 'இந்து தமிழ்' நாழிதல் செய்தித்தாள் செய்தி - 1.11.2017
 2. 2.0 2.1 2.2 2.3 "கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (சென்னை) மற்றும் ஔவைக்கோட்டம்(திருவையாறு) தலைவர், காவியக் கலைமாமணி, செந்தமிழ் திலகம், சொல்லின் செல்வி, கம்பராமாயண நவரசத் திலகம், ஏழிசை அரசி, ஏழிசை வள்ளி, முத்தமிழ் பேரரசி, இயல் இசை தமிழ் வாணி, உபன்யாசத் திலகம், திருப்புகழ் செம்மணி, இசை ஞான இலக்கியப் பேரொளி உள்ளிட்ட விருதுகள் பெற்ற முனைவர். சரஸ்வதி இராமநாதன் எம்.ஏ,எம்.எட்.பி.எச்.டி. அவர்கள் 'திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108' நூலுக்கு வழங்கிய அன்புநிறை முன்னுரை".
 3. 3.0 3.1 3.2 திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 நூலுக்கு அந்நாள் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் அளித்த அணிந்துரை
 4. 4.0 4.1 4.2 4.3 4.4 நூல்: திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
 5. 12-Feb-2020ல், சென்னை வைஷ்ணவ கல்லூரியில் நிகழ்ந்த "அனைத்துலகத் தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டில்", 108 சிற்றிலக்கிய வகைகளைப் பாடிய மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தருக்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு க. பாண்டியராஜன் அவர்களால் ‘சிற்றிலக்கிய மகாகவி’ விருது வழங்கப்பெற்றது பற்றிய செய்திக் குறிப்பு.