திவ்ய கோஸ்லா குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திவ்ய கோஸ்லா குமார்
2017 இல் திவ்ய கோஸ்லா குமார்
பிறப்புநவம்பர் 20, 1987 (1987-11-20) (அகவை 36)[1][2][3]
தில்லி, இந்தியா
பணி
வாழ்க்கைத்
துணை
பூசண்குமார் (தி. 2005)
பிள்ளைகள்1

திவ்ய கோஸ்லா குமார் (Divya Khosla Kumar, திவ்யா என்றும் அழைக்கப்படுகிறார்) [4] [5] என்பவர் ஒரு இந்திய நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் பல்வேறு விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார் மற்றும் பல இசைக் காணொளிகளிலும் இடம்பெற்றுள்ளார். இவர் டி-சீரிஸ் மியூசிக் லேபிள் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பூஷன் குமாரை மணந்தார். இவர் காதல் நகைச்சுவை படமான யாரியன் (2014) மற்றும் காதல் நாடகப் படமான சனம் ரே (2016) ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கணவர் பூஷன் குமாருடன் திவ்யா

கோஸ்லா பூஷன் குமாரை 2005 பெப்ரவரி 13 அன்று கட்ராவில் உள்ள மா வைஷ்ணோ தேவி கோயிலில் திருமணம் செய்து கொண்டார். [6] இவர்களுக்கு 2011 அக்டோபரில் ஒரு மகன் பிறந்தான் [7]

தொழில்[தொகு]

2020 இல் திவ்யா

இவர் 2004 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான லவ் டுடே மூலம் நடிகையாக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அதில் இவர் உதய் கிரணுடன் இணைந்து நடித்தார். ஃபால்குனி பதக் பாடிய 'ஐயோ ராமா' என்ற பாப் பாடலுக்கான இசைக் காணொளியிலும் இவர் தோன்றினார். [8] அதே ஆண்டில், அப் தும்ஹரே ஹவாலே வதன் சத்தியோ என்ற திரைப்படத்தின் வழியாக பாலிவுட்டில் அறிமுகமானார். அதில் அக்‌சய் குமார் மற்றும் பாபி தியோலுக்கு ஜோடியாக ஸ்வேதா என்ற பாத்திரத்தில் நடித்தார். [9] ரெடிஃப் இணையதளம் படத்தில் திவ்யாவின் நடிப்பைக் குறிப்பிடுகையில், "திவ்யா கோஸ்லா இதைவிட அதிகம் செய்ய எதுவுமில்லை மேலும் சில காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார்" என்று குறிப்பிட்டது. [10]

திவ்யா பின்னர் இயக்கத்தில் கவனம் செலுத்துவதற்காக நடிப்பில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டார். [11] இயக்கத்துக்கு உதவியாக ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு குறித்த படிப்பை முடித்தார். பிறகு, குமார் அகம் குமார் நிகம், ஜெர்மைன் ஜாக்சன், துளசி குமார் மற்றும் சில விளம்பரப் படங்களுக்கு இசைக் காணொளிகளை இயக்கினார். அவ்வாறு 20 இசைக் காணொளிகளை இயக்கினார். அதன் பிறகு, திவ்யா 2014 இல் யாரியன் என்ற படத்தை இயக்கினார். படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும் இது வணிக ரீதியான வெற்றியை ஈட்டியது. [12] திவ்யா இப்படத்தில் "பாரிஷ்", "மா", "லவ் மீ தோடா அவுர்", "அல்லா வாரியா" "ஜோர் லகேக்" உட்பட ஐந்து பாடல்களுக்கு நடன அசைவுகளை அமைத்தார். [13]

2016 பெப்ரவரி 12 அன்று வெளியான சனம் ரே திரைப்படம் இவரது இரண்டாவது இயக்கத்தில் வெளியான படமாகும். [14] திவ்யா டி-சீரிஸுடன் இணைந்து பல படங்களைத் தயாரித்துள்ளார்.

திவ்யா 2017 இல் புல்புல் என்ற குறும்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். [15] 2021 இல், இவர் ஜான் ஆபிரகாமுக்கு ஜோடியாக சத்யமேவ ஜெயதே 2 படத்தில் நடித்தார். [16] [17] இந்தத் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, இருப்பினும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தன் விமர்சனத்தில், "திவ்யா கோஸ்லா குமார் ஆண் ஆதிக்கம் செலுத்தும் இந்த திரைப்படத்தில் மிகவும் முக்கிய பங்கை வகித்துள்ளார்" என்றது.

திவ்யா அடுத்ததாக யாரியான் 2 படத்தில் நடித்தார். இது 2014 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான பெங்களூர் டேய்சின் மறு ஆக்கம் ஆகும். [18] [19]

திரைப்படவியல்[தொகு]

குறி
Films that have not yet been released இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது

நடிகையாக[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள் மேற்கோள்.
2004 லவ் டுடே பர்வத வர்த்தினி தெலுங்கு படம் [20]
அப் தும்ஹரே ஹவாலே வதன் சாதியோ ஸ்வேதா ராஜீவ் சிங் [21]
2016 சனம் ரெ தானாகவே "அக்காட் பக்கத்" மற்றும் "ஹம்னே பீ ரக்கி ஹைன்" பாடல்களில் சிறப்பு தோற்றம் [22]
2017 புல்புல் புல்புல் குறும்படம் [23]
2021 சத்யமேவ ஜெயதே 2 எம்எல்ஏ வித்யா மவுரியா ஆசாத் [16]
2023 யாரியன் 2 லாட்லி சிப்பர் [24]

இயக்குநராக[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள் மேற்கோள்
2014 யாரியான் இயக்குனராக அறிமுகம் [25]
2016 சனம் ரெ [26]

தயாரிப்பாளராக[தொகு]

ஆண்டு திரைப்படம் குறிப்புகள் மேற்கோள்
2015 ராய் [27]
2019 கந்தானி ஷஃபாகானா
பாட்லா ஹவுஸ்
மர்ஜாவான் [28]
2020 ஸ்ட்ரீட் டான்சர் 3D
லுடோ நெட்ஃபிக்ஸ் வெளியீடு [29]
இந்தூ கி ஜவானி
2021 சர்தார் கா பேரன் நெட்ஃபிக்ஸ் வெளியீடு
2023 யாரியன் 2 [24]

விருதுகளும் பரிந்துரைகளும்[தொகு]

திவ்யா 2018 இல்
ஆண்டு விருது வகை திரைப்படம் முடிவு மேற்கோள்
2005 பாலிவுட் திரைப்பட விருது சிறந்த அறிமுக நடிகை அப் தும்ஹரே ஹவாலே வதன் சத்தியோ பரிந்துரை [30]
2021 பிலிம்பேர் விருதுகள் சிறந்த திரைப்படம் லுடோ பரிந்துரை

மேற்கோள்கள்[தொகு]

 1. "I came to Mumbai to achieve something and not to get married: Divya Khosla Kumar". The Times of India. 2013-12-08 இம் மூலத்தில் இருந்து 18 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210418065103/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/i-came-to-mumbai-to-achieve-something-and-not-to-get-married-divya-khosla-kumar/articleshow/27024589.cms. 
 2. Yadav, Aditi. "दिव्या खोसला ने यारियां 2 की टीम के साथ सेलिब्रेट किया अपना बर्थडे, एक्टर पर्ल वी पुरी भी आए नजर - Divya Khosla celebrated her birthday with Pearl V Puri and the team of Yaariyan 2" (in hi). Jagran இம் மூலத்தில் இருந்து 25 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231225100142/https://www.jagran.com/entertainment/bollywood-divya-khosla-celebrated-her-birthday-with-pearl-v-puri-and-the-team-of-yaariyan2-23221884.html. 
 3. Sharma, Divyanshi. "Divya Khosla Kumar celebrates birthday on Satyameva Jayate 2 sets, shares photos" (in en). இந்தியா டுடே இம் மூலத்தில் இருந்து 25 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231225100142/https://www.indiatoday.in/movies/celebrities/story/divya-khosla-kumar-celebrates-birthday-on-satyameva-jayate-2-sets-shares-photos-1742674-2020-11-20. 
 4. Jha, Subhash K (2024-02-01). "'It Is By Far My Most Challenging Role' Says Divyah Khosla on Hero Heeroine - Exclusive". TimesNow (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-14.
 5. Singh, Simran. "Hero Heeroine: Prerna Arora's bilingual film starts filming in Hyderabad, makers release new poster". www.dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 2024-02-14.
 6. "Divya Khosla and Bhushan Kumar were married in Vaishno Devi Temple; check out their love story". India TV இம் மூலத்தில் இருந்து 1 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221101182028/https://www.indiatv.in/amp/gallery/bollywood-images-divya-khosla-and-bhushan-kumar-were-married-in-vaishno-devi-temple-love-story-of-both-721390. 
 7. "Bhushan and Divya Kumar blessed with a boy". Bollywood Hungama இம் மூலத்தில் இருந்து 26 June 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130626181828/http://www.bollywoodhungama.com/news/1369140/Bhushan-Kumar-blessed-with-baby-boy. 
 8. "12 Actors You Might Have Missed In Falguni Pathak Videos & What They're Up To Now". ScoopWhoop (in ஆங்கிலம்). 2016-06-27. Archived from the original on 25 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-25.
 9. "rediff.com: 'I would love to work with Salman Khan!'". specials.rediff.com. Archived from the original on 28 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-09-28.
 10. "Ab Tumhare Hawale Watan Sathiyo Review – Ab Tumhare Hawale is a muddle!". Rediff. 24 December 2004. Archived from the original on 1 November 2022. பார்க்கப்பட்ட நாள் 1 November 2022.
 11. "I enjoy direction more than acting: Divya Khosla - Indian Express". The Indian Express. Archived from the original on 21 February 2014. பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.
 12. My scripts were rejected by Bhushan, reveals Divya Khosla Kumar who turns director with 'Yaariyan' பரணிடப்பட்டது 18 திசம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்.
 13. Director Divya Khosla Kumar choreographs five songs for Yaariyan : Bollywood, News – India Today பரணிடப்பட்டது 8 சனவரி 2014 at the வந்தவழி இயந்திரம்.
 14. 'My husband said, 'Why make a film?
 15. "Actor-producer Divya Khosla Kumar learns Kathak for 'Bulbul'". Zee News (in ஆங்கிலம்). 5 December 2017. Archived from the original on 18 April 2021. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
 16. 16.0 16.1 "John Abraham starrer Satyameva Jayate 2". Bollywood Hungama. 17 March 2021. Archived from the original on 27 September 2019. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
 17. Mamta Raut (20 November 2021). "Divya Khosla Kumar turns silver goddess, John Abraham keeps it casual at Bigg Boss 15 set". Pinkvilla. Archived from the original on 30 November 2021. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
 18. Mathur, Vinamra (2023-10-20). "Divya Khosla Kumar, Meezaan Jafri, Priya Prakash Varrier's Yaariyan 2 review". Firstpost (in ஆங்கிலம்). Archived from the original on 20 October 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-12-25.
 19. "Out of sync with the times" இம் மூலத்தில் இருந்து 25 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231225100142/https://www.tribuneindia.com/news/reviews/story/out-of-sync-with-the-times-555202. 
 20. "Have a look at the MULTI-talented and versatile Divya Khosla!" (in Indian English). Yahoo! News. Archived from the original on 2021-04-22. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
 21. "World would be so dry without women: 'Yaariyan' director Divya Khosla Kumar". The New Indian Express. Archived from the original on 5 February 2024. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
 22. "Divya Khosla Kumar does a hot dance in 'Sanam Re' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 18 April 2021. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
 23. "WATCH | Bulbul star Divya Khosla Kumar finds filmmaking 'very tough'". The New Indian Express. Archived from the original on 27 September 2019. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
 24. 24.0 24.1 "Divya Khosla Kumar, Pearl V Puri, and Meezaan Jafri roped for Yaariyan 2; film to release in Summer 2023" இம் மூலத்தில் இருந்து 24 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221024052716/https://www.bollywoodhungama.com/news/bollywood/pearl-v-puri-priya-varrier-meezaan-jafri-others-roped-yaariyan-2-release-summer-2023/. 
 25. "Exclusive! Divya Khosla Kumar: It is not easy to be a filmmaker and it has nothing to do with my gender - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Archived from the original on 6 February 2021. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
 26. "I don't miss acting: Sanam Re director Divya Khosla Kumar". Hindustan Times (in ஆங்கிலம்). 28 January 2016. Archived from the original on 18 April 2021. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
 27. "Divya Khosla Kumar: The Stunner, the Producer, the Yummy Mummy". dailybhaskar (in ஆங்கிலம்). 7 June 2016. Archived from the original on 5 February 2024. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
 28. "Sidharth Malhotra shares first look poster of Marjaavaan, the film will also star Tara Sutaria. See pic". https://www.hindustantimes.com/bollywood/sidharth-malhotra-shares-first-look-poster-of-marjaavaan-the-film-will-also-star-tara-sutaria-see-pic/story-KZEho73DPAZg8D0lAjkZSN.html. 
 29. "Abhishek, Aditya Roy Kapur, Rajkummar, Pankaj Tripathi & others lives go beyond one's understanding". DNA (in அமெரிக்க ஆங்கிலம்). 19 October 2020. Archived from the original on 21 October 2020. பார்க்கப்பட்ட நாள் 17 March 2021.
 30. "Bollywood Music & Fashion Awards". Bollywood Awards. 2011-07-05. Archived from the original on 2011-07-05. பார்க்கப்பட்ட நாள் 2024-02-14.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Divya Khosla Kumar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்ய_கோஸ்லா_குமார்&oldid=3892607" இலிருந்து மீள்விக்கப்பட்டது