திவ்யா உன்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திவ்யா உன்னி
Divya unni.jpg
2010இல் திவ்யா உன்னியின் பரதநாட்டிய காட்சி
பிறப்பு22 அக்டோபர் 1981 (1981-10-22) (அகவை 40)
கொச்சி, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியா
பணிநடிகை, இந்திய கிளாசிக்கல் நடன கலைஞர் மற்றும் ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1987 முதல் தற்போது வரை
உயரம்5 அடி 8 அங்குலம்
வாழ்க்கைத்
துணை
  • சுதிர் சேகர்
    (தி. 2002; ம.மு. 2016)
  • அருண் குமார் (தி. 2018)

திவ்யா உன்னி (Divyaa Unni) இவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் மோகினியாட்டம் போன்ற பல்வேறு வகையான நடனங்களைக் கற்பிக்கிறார். மலையாளத்தில் முக்கியமாக 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகையும் ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கொச்சியில் பொன்னெத்மடத்தில் உன்னிகிருஷ்ணன் மற்றும் கிழக்கேமடத்தில் உமா தேவி ஆகியோருக்கு திவ்யா உன்னி பிறந்தார். இவரது தாயார் உமா தேவி, கிரிநகரில் உள்ள பவன் வித்யா மந்திர் பள்ளியின் ஒரு சமசுகிருத ஆசிரியரும் மற்றும் சமசுகிருதத் துறையின் தலைவராகவும் இருந்தார். மேலும் உமாதேவி ஆசிரியர்களுக்கான தேசிய விருதினை, [1] [2] 2013 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து பெற்றுள்ளார். திவ்யாவுக்கு வித்யா உன்னி என்ற சகோதரி உள்ளார். இவரும் இரண்டு மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரும் பள்ளிப்படிப்பை கிரிநகர், பவன் வித்யா மந்திர் பள்ளியில் முடித்தார் .

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

எர்ணாகுளம் புனித தெரசா கல்லூரியில் தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். திவ்யா மலையாள நடிகை மீரா நந்தன் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோருக்கு உறவினராவார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

திவ்யா மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒரு முன்னணி நடிகையாக நடித்துள்ளார். மேலும் பிராணயவர்ணங்கள் மற்றும் இயக்குநர் பரதனின் கடைசி படமான சூரம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் இரண்டாம் வகுப்பில் மாணவியாக இருந்தபோதே ஒரு குழந்தையாக இருந்தபோது, நீ எத்ரா தன்யா என்ற படத்தில் திவ்யாவுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து இயக்குநர் கமல் இயக்கிய பூக்கலம் வரவாய், ஸ்ரீகுட்டன் இயக்கிய பேபி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இயக்குநர் வினயன் இயக்கிய இனியோனு விஷ்ரமிக்கட்டே என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருந்தார்.

முன்னணி நடிகையாக திவ்யாவின் முதல் திரைப்படம் கல்யாண சௌகந்திகம் என்பதாகும். அதில்  முக்கிய கதாபாத்திரங்களில் திலீப் மற்றும் கலாபவன் மணி போன்ற நடிகர்களுடன் நடித்தார். இவர் தனது பதினான்கு வயதில் பத்தாம் வகுப்பில் படிக்கும் போது இப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து, மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி மற்றும் ஜெயராம் ஆகிய நடிகர்களுடனும் மற்றும் பரதன், ஐ. வி. சசி, சிபி மலையில் மற்றும் லோகிததாசு போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார்.

நடன வாழ்க்கை[தொகு]

திவ்யா தனது மூன்று வயதில் பரதநாட்டிய நடனப் பயிற்சியைத் தொடங்கினார். அதன் பிறகு குச்சிபுடி மற்றும் மோகினியாட்டத்தில் பயிற்சி பெற்றார். அதைத் தொடர்ந்து, 1990 மற்றும் 1991ஆம் ஆண்டுகளில், கேரள பள்ளி கலோத்வசம் என்ற மாநிலம் தழுவிய போட்டிகளில் கலாத்திலகம் என்று முடிசூட்டப்பட்டார். இந்தியாவின் முதன்மையான தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனில், பரதநாட்டியம், குச்சிபுடி, மோகினியாட்டம், மற்றும் இந்திய நாட்டுப்புற நடனம் போன்ற பல்வேறு வகையான இந்திய நடன கலை வடிவங்களை இவர் வழங்கியுள்ளார். இந்தியாவில் பல்வேறு இந்திய நடன விழாக்களில் [3] [4] [5] [6] [7] மற்றும் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளில் உள்ள சர்வதேச நிலைகளில் இவர் தொடர்ந்து நடனமாடி வருகிறார்.

விருதுகள்[தொகு]

சிறந்த மாநில நடன நிகழ்ச்சிக்கான அபிநய திலக புரஸ்காரம் மற்றும் அரவிந்தாக்சா நினைவு விருது உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார் .

நடனப் பள்ளி[தொகு]

மேற்கில் இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், திவ்யா தற்போது அமெரிக்காவில் வசிக்கும் இளம் குழந்தைகளின் கலை திறமைகளை வளர்த்து வருகிறார். இந்த இலக்கைக் கொண்டு, இவர் தற்போது அமெரிக்காவின் டெக்சஸ், ஹியூஸ்டனில் உள்ள சிரீபாதம் கலைப்பள்ளியின் இயக்குநராக உள்ளார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Divyaa Unni
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யா_உன்னி&oldid=2939440" இருந்து மீள்விக்கப்பட்டது