தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்

[[படிமம்:|125px|தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்]]
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் மாறும் உலகின் மாற்றங்களை அனுசரித்து, சகிப்புத் தன்மை ,நடுநிலைமை,பிறர் நலம் பேணல் போன்ற நற்பண்புகளை மாணவர் மத்தியில் வளர்த்து சமூக பிரஜைகளை உருவாக்கி தேச நலனைக் காத்தல்.,
()
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் வடமேல் மாகாணம்
மாவட்டம் புத்தளம்
நகரம் தில்லையடி
இதர தரவுகள்
அதிபர் ஏ. ஹாஜா அலாவுதீன்
துணை அதிபர் எம். டீ. எம். சியாத்
மாணவர்கள் 1300 (2018)
ஆசிரியர்கள் 55(2018)
ஆரம்பம் 1978
http://thillaiyadi.sch.lk/

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்[1][2] (Thillayadi Muslim Maha Vidhyalaya) வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் தில்லையடி பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு பாடசாலையாகும். புத்தளம் மாவட்டத்தில் மிகப்பெரிய மைதானத்தை கொண்ட பாடசாலையும் இதுவென்பதால், வலய மற்றும் கோட்ட விளையாட்டுபோட்டிகள் பெரும்பாலும் இங்கே நடைபெறும்.

வரலாறு[தொகு]

தில்லையடியைச் சேர்ந்த முன்னால் பிரதி நகரபிதா திரு.எம்.எம். அஹமட் கபீர் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க; புத்தளத்தை பிறப்பிடமாக கொண்ட தேசிய அரசுப் பேரவை உறுப்பினரும், நிதித்திட்டமிடல், பொருளாதார, பிரதி அமைச்சருமான ஜனாப் எம்.எச்.எம். நெய்னா மரைக்கார் அவர்களால் 1978.02.10ம் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

உத்தியோக பூர்வ வலைத்தளம் http://www.thillaiyadi.sch.lk/web/[தொடர்பிழந்த இணைப்பு]

தூர நோக்கு[தொகு]

மாறும் உலகின் மாற்றங்களை அனுசரித்து, சகிப்புத் தன்மை ,நடுநிலைமை,பிறர் நலம் பேணல் போன்ற நற்பண்புகளை மாணவர் மத்தியில் வளர்த்து சமூக பிரஜைகளை உருவாக்கி தேச நலனைக் காத்தல்.

பணிக்கூற்று[தொகு]

அதிபர், ஆசிரியர், மாணவர்,பெற்றார் மற்றும் நலன் விரும்பிகளாகிய நாம் எமது கல்லுரி முகாமைத்துவத்தில் பங்கெடுத்து ஜனநாயக சூழலை உருவாக்கி, மனித விழுமியங்களையும் தத்தமது ஒழுக்க பண்பாட்டு கலாசார விழுமியங்களையும் கடைப்பிடித்து, பல்லின சமூகத்தினரிடையே சேர்ந்து வாழும் திறமைகளை உருவாக்கி, நவீன வேலை உலகிற்கு ஏற்ற மாணவர் பரம்பரையை உருவாக்க உறுதி பூணுவோம்.

விளையாட்டு பங்கேற்பு[தொகு]

  • 13 வயதிற்கு கீழ்பட்டோரருக்கான காற்பந்து சுற்றுபோட்டியில்[3]

வெளிவாரி நிகழ்வுகள்[தொகு]

  • பாடசாலை மைதானத்தில் பெருநாள் தொழுகை[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2018-08-20.
  2. http://www.shareknowledge.net/school/thillaiyadi-muslim-maha-vidiyalayam[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://puttalamtoday.com/32851-2/[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-11. பார்க்கப்பட்ட நாள் 2018-08-20.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-16. பார்க்கப்பட்ட நாள் 2018-08-20.