உள்ளடக்கத்துக்குச் செல்

தில்லி காவல்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லி காவல்துறை
சுருக்கம்DP
குறிக்கோள்அமைதி சேவை நீதி
(शांति सेवा न्याय)
Peace Service Justice
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்1861ல் (பிரித்தானிய இந்தியாவின் பாதுகாப்புப் படைகள் எனும் பெயரில் துவங்கியது)
16 பிப்ரவரி 1948 அன்று (தில்லி காவல் துறை)[1]
முந்தைய துறை
  • நகர்புற காவல்
பணியாளர்கள்94,255
ஆண்டு வரவு செலவு திட்டம்11,933.03 (US$150) (2023–24)[2]
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புதில்லி, IN
11 மாவட்டங்கள்
அளவு1,484 km2 (573 sq mi)
மக்கள் தொகை16,753,235
சட்ட அதிகார வரம்புAs per operations jurisdiction
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
தலைமையகம்ஜெய் சிங் மார்க்
புது தில்லி, தில்லி, இந்தியா
அமைச்சர்
துறை நிருவாகி
வசதிகள்
Stations198 (20 சிறப்பு நிலையங்கள் உள்பட)
உலங்கு வானூர்திகள்s1[3]
இணையத்தளம்
delhipolice.gov.in
கோவிட் பெருந்தொற்று குறித்த தில்லி காவல்துறையின் விழிப்புணர்வு சுவரொட்டி, நாள் 20 ஏப்ரல் 2020[4][5]

தில்லி காவல்துறை (Delhi Police (DP), தில்லி தேசிய தலைநகர் பகுதியை காவல் காக்கும் அமைப்பாகும். இது இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[6] இதுவே உலகின் பெரிய பெருநகர காவல்படையாகும்.[7] தில்லி காவல் படையின் 25% காவலர்கள் முக்கியமானவர்களின் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.[8]

தில்லி காவல்துறை தில்லியின் 11 மாவட்டங்களை தனது காவல் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. 2019இல் தில்லியானது 15 காவல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கு ஒரு காவல் துணை ஆணையர் தலைமையில் இயங்குகிறது.

தற்போதைய அமைப்பு

[தொகு]
தில்லி காவல் இயக்குநரகத்தின் புதிய தலைமையிடக் கட்டிடம்

சனவரி 2019 நிலவரப்படி, தில்லி காவல்துறை 178 காவல் நிலையங்கள் மற்றும் 15 காவல் மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இது தவிர 7 இரயில்வே காவல் நிலையங்கள், 16 மெட்ரோ இரயில் காவல் நிலையங்கள் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு, குற்றப்பிரிவு, சிறப்பு பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு காவல் பிரிவு மற்றும் விழிப்புணர்வு என 5 சிறப்பு குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்படுகிறது.

பயிற்சி

[தொகு]

1984ஆம் ஆண்டு முதல், தில்லி காவல் பயிற்சிக் கல்லூரிகள் ஜரோடா கலான் மற்றும் தில்லியின் வஜிராபாத் கிராமத்தில் அமைந்துள்ளது.[7]

தலைமையகம்

[தொகு]

தில்லி காவல்துறையின் புதிய தலைமையகம் ஜெய் சிங் மார்க், கன்னாட் பிளேஸ், புது தில்லியில் அமைந்துள்ளது. தில்லி காவல் ஆணையாளரின் கீழ் தில்லி காவல்துறை பன்னிரண்டு கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முக்கிய நான்கு கிளைகள், ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு காவல் ஆணையாளரின் கீழ் செயல்படுகிறது.

  • சிறப்பு காவல் ஆணையாளர் (நிர்வாகம்): அவருக்கு கீழ் மூன்று காவல் இணை ஆணையாளர்களையும், இரண்டு கூடுதல் சிறப்புக் காவல் ஆணையாளர்களையும் கொண்டுள்ளது. அவர்களில் ஒருவர் தலைமையகத்திற்கு பொறுப்பு. ஒவ்வொரு இணை மற்றும் கூடுதல் சிறப்பு ஆணையாளரின் கீழ் ஒரு துணை காவல் ஆணையாளர் இருக்கிறார். தலைமையகத்திற்கு பொறுப்பான சிறப்பு காவல் ஆணையாளர் மக்கள் தொடர்புகளுக்கு பொறுப்பானவர் மற்றும் அவருக்கு கீழ் ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளார்.
  • சிறப்பு காவல் ஆணையாளர் (பயிற்சி): சிறப்பு காவல் ஆணையாளரின் கீழ் ஒரு துணை போலீஸ் கமிஷனர் பயிற்சிக் கல்லூரியின் முதல்வராக உள்ளார்.
  • சிறப்பு காவல் ஆணையாளர் (பாதுகாப்பு): பாதுகாப்பு சிறப்பு ஆணையாளரின் கீழ் மூன்று இணை காவல் ஆணையாளர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் கீழ் ஒரு கூடுதல் சிறப்பு காவல் ஆணையாளர்கள் உள்ளார். இவர் ஒவ்வொரு காவல்துறை பட்டாலியன்களுக்கு உத்தரவுகளை வழங்குகிறார்
  • சிறப்பு காவல் ஆணையாளர் (உளவுத்துறை): சிறப்பு காவல் ஆணையாளரின் கீழ் ஒரு கூடுதல் காவல் ஆணையாளர் ஒரு இணை காவல் ஆணையாளர் பணிபுரிகிறார்கள்.

தில்லி காவல் துறையின் உதவி எண்கள்

[தொகு]
  • காவல் கட்டுப்பாட்டு அறை - 100/112
  • மூத்த குடிமக்கள் பாதுகாப்பு உதவிப் பிரிவு - 1291
  • போக்குவரத்து பிரச்சனைகள் - 1095
  • மகளிர் உதவி எண் - 1091
  • ஆபாச அழைப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான உதவி எண்கள் – 1091
  • தீவிரவாதம் – 1090
  • வடகிழக்கு மக்களுக்கான உதவி எண் – 1093

மேற்கோள்கள்

[தொகு]
  1. "69TH DELHI POLICE RAISING DAY – (16.02.2016)".
  2. "Rs 1.85 lakh crore allocation to MHA in budget". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/india/rs-1-85-lakh-crore-allocation-to-mha-in-budget/articleshow/89275279.cms. 
  3. ndaph. "The Hindu Business Line : Pawan Hans to provide copter to Delhi Police for surveillance". www.thehindubusinessline.com. Archived from the original on 17 November 2005. பார்க்கப்பட்ட நாள் 19 May 2008.
  4. Nandy, Sumana (23 April 2020). ""Dil Ki Police": Delhi Cops' Balm For Commuters Amid Lockdown". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2020-05-25.
  5. Taskin, Bismee (23 April 2020). "'Dil Ki Police': Delhi Police Twitter handle gets colourful makeover to motivate ground staff". The Print. https://theprint.in/india/dil-ki-police-delhi-police-twitter-handle-gets-colourful-makeover-to-motivate-ground-staff/407220/. 
  6. "दिल्ली पुलिस: राज्य सरकार को नियंत्रण देना कितना कठिन?" (in hi). BBC News हिंदी. 21 January 2014. https://www.bbc.com/hindi/india/2014/01/140122_control_over_delhi_police_pk. "दिल्ली पुलिस फिलहाल गृह मंत्रालय के अधीन है. दूसरे राज्यों पर पुलिस और प्रशासन की व्यवस्था राज्य सरकार के अधीन होती है." 
  7. 7.0 7.1 N. R. Madhava Menon, D. Banerjea (2002). Criminal Justice India Series: Volume 7 National Capital Territory of Delhi. Ahmedabad: Allied Publishers. pp. 45–46.
  8. Singh, Sumit Kumar (8 May 2016). "Delhi Sees 142 Murders, 578 Rapes and 1,729 Robberies in Less Than Four Months" (in en). NewIndianexpress. New Delhi: sundaystandard. http://www.newindianexpress.com/thesundaystandard/Delhi-Sees-142-Murders-578-Rapes-and-1729-Robberies-in-Less-Than-Four-Months/2016/05/08/article3420989.ecenths. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_காவல்துறை&oldid=3754110" இலிருந்து மீள்விக்கப்பட்டது