உள்ளடக்கத்துக்குச் செல்

தில்சாத் அக்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்சாத் அக்தர்
பிறப்புமுக்த்சர் சாகிப் மாவட்டம், பஞ்சாப்
இறப்பு28-சனவரி-1996
குர்தாசுபூர் மாவட்டம், பஞ்சாப்
தேசியம்இந்தியன்
பணிபாடகர்

தில்சாத் அக்தர் (Dilshad Akhtar) இந்திய நாட்டினைச் சார்ந்த பஞ்சாபி நாட்டுப்புற இசை பாடகர் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதியன்று இறந்தார். பல பஞ்சாபி படங்களில் பின்னணி பாடகராகவும் பணியாற்றினார்.[1][2] மன்பிரீத் அக்தர், இவரது சகோதரி மற்றும் இவரது உறவினர் சந்தீப் அக்தர் ஆகியோரும் பாடகர்களாக இருந்தனர்.[3]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இந்திய நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் சிறீ முக்த்சர் சாகிப் மாவட்டத்தின் கில்சேவாலா கிராமத்தில் பிறந்த அக்தர், பரித்கோட் பகுதியில் உள்ள தனது ஆசிரியரிடம் இசை கற்றுக்கொண்டார்.[4]

1996 ஆம் ஆண்டு சனவரி மாதம் 28 ஆம் தேதியன்று, குர்தாசுபூர் மாவட்டத்தின் சிங்புரா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, காவல் அதிகாரி பாடலுக்கான கோரிக்கையை ஏற்க மறுத்ததால் அக்தர் காவல் அதிகாரியால் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Upset over CBI cases, retired DSP commits suicide". http://www.tribuneindia.com/2008/20080313/main4.htm. 
  2. "Singers demand ban on firing during celebrations". http://www.tribuneindia.com/2012/20120217/jal.htm. 
  3. Dhillon, Sukhpal Singh. "ਨੌਜਵਾਨ ਗਾਇਕ ਸੰਦੀਪ ਅਖ਼ਤਰ ਦੀ ਕੈਂਸਰ ਕਾਰਨ ਮੌਤ". http://www.ajitjalandhar.com/20111011/punjab.php. 
  4. "Dilshad Akhtar". dilapnapunjabi.net. Archived from the original on September 5, 2011. Retrieved April 23, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்சாத்_அக்தர்&oldid=4203162" இலிருந்து மீள்விக்கப்பட்டது