திலீப் பிரமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலீப் பிரமல்
திலீப் பிரமல்
பிறப்பு2 நவம்பர் 1949 (1949-11-02) (அகவை 74)
மும்பை, இந்தியா
தேசியம்Indian
கல்விசைடென்காம் வணிகவியல் மற்றும் பொருளியில் கல்லூரி (இளங்கலை வணிகவியல்)
பணிவணிகம்
அறியப்படுவதுவிஐபி பயணப்பெட்டி
பட்டம்தலைவர், விஐபி இண்டஸ்ட்ரீஸ்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
விஐபி இண்டஸ்ட்ரீஸ்
வாழ்க்கைத்
துணை
  • கீதா பிரமல்
    (தி. 1975; ம.மு. 2005)
  • சாலினி பிரமல் (தி. 2005)
பிள்ளைகள்3

திலீப் பிரமல் (Dilip Piramal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபராவார். மிகப்பெரிய சுமைகள் எடுத்துச் செல்லும் பெட்டிகள் மற்றும் பைகள் தயாரிக்கும் விஐபி தொழிற்சாலைகளின் தலைவராக அறியப்படுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

திலீப் பிரமல் நவம்பர் 2, 1949 அன்று மும்பையில் பிறந்தார் . [1] அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். [2] இவரது தாத்தா பிரமல் சத்ரபுஜ் ஜவுளி வணிகத்தை 1934 ஆம் ஆண்டில் நடத்திக் கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டில், அவரது தந்தை கோபிகிருஷ்ணா பிரமல் திடீர் மரணத்திற்கு பிறகு, திலீப் பிரமல் விஐபி பயணப்பெட்டிகள் தயாரிக்கும் வணிகத்திற்கும், அவரது சகோதரர் அஜய் பிரமல் குடும்பத்தின் துணி வியாபாரத்தையும் வெளியே தொடங்கிய வேளையில் துணிந்து, அவர்கள் பிரிந்து செய்ததோடு தங்கள் வணிகத்தை 1987 ஆம் ஆண்டில் நிக்கோலஸ் ஆய்வுக்கூடங்கைளப் பெற்று மருந்து தயாரிக்கும் தொழிலிற்கும் விரிவுபடுத்தினர்.[3]

கல்வி[தொகு]

பிரமல் 1970 இல் சிடன்ஹாம் வணிக மற்றும் பொருளாதார கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார். [4] [5]

தொழில்[தொகு]

பிரமல் 1970 இல் மொரார்ஜி ஆலையின் இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அதே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியை எடுத்து 1980 வரை வகித்தார். [6] 1973 ஆம் ஆண்டில், திலீப் ப்ளோ பிளாஸ்ட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரானார். 1980ஆம் ஆண்டு முதல் அவர் ப்ளோ பிளாஸ்ட் லிமிடெட் மற்றும் விஐபி இண்டஸ்ட்ரீஸ் [7] தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்து வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

திலீப் 1975 ஆம் ஆண்டில் கீதா பிரமலை மணந்தார். [8] அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 2005 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்தனர். [9]

திலீப் 2005 ஆம் ஆண்டில் ஷாலினி பிரமலை மணந்தார். [10] அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "I’m not very disciplined: Dilip Piramal". Oct 31, 2009. https://www.dnaindia.com/lifestyle/report-i-m-not-very-disciplined-dilip-piramal-1305505. 
  2. "Dilip Piramal lives in the lap of luxury but values his time the most". Forbes India. November 11, 2014.
  3. "Piramal Family". Forbes. November 14, 2017.
  4. "Dilip Gopikisan Piramal, 69". WSJ. பார்க்கப்பட்ட நாள் July 31, 2018.
  5. "Prominent Alumni". Prominent Alumni. பார்க்கப்பட்ட நாள் July 8, 2020.
  6. "VIP Industries Dilip Piramal". CNBCTV18. பார்க்கப்பட்ட நாள் October 1, 2019.
  7. "Dilip Piramal Sees Opportunity in Crisis". Indiatimes. பார்க்கப்பட்ட நாள் February 13, 2020.
  8. "Redefining Resilience". Marwar. Archived from the original on ஜூலை 11, 2020. பார்க்கப்பட்ட நாள் March 17, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Dilip Gita Piramal Divorced". Financial Express. பார்க்கப்பட்ட நாள் June 4, 2005.
  10. "Ties in Double Knots". Outlook India. பார்க்கப்பட்ட நாள் October 5, 2005.
  11. "Ties in Double Knots". Outlook India. பார்க்கப்பட்ட நாள் October 15, 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்_பிரமல்&oldid=3835346" இலிருந்து மீள்விக்கப்பட்டது