திலீப் சந்திர நாத்து
திலீப் சந்திர நாத்து (Dilip Chandra Nath) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். ஒரு பேராசிரியராகப் பணியாற்றினார். இராயல் குளோபல் பல்கலைக்கழகத்தில் (அதிகாரப்பூர்வமாக தி அசாம் இராயல் குளோபல் பல்கலைக்கழகம், குவகாத்தி என நிறுவப்பட்டது) இவர் ஓர் ஓய்வு பெற்ற பேராசிரியராகவும் கௌரவ ஆலோசகராகவும் உள்ளார்.[1] முன்னர் 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் சில்சார் (ஒரு மத்திய பல்கலைக்கழகம்) அசாம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றினார்.[2] அசாம் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பதவியேற்பதற்கு முன்பு, இந்தியாவின் குவகாத்தி பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவரப் பேராசிரியராக இருந்தார்.[3] [4]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]1972 ஆம் ஆண்டு குவகாத்தி பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டத்தையும், 1975 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் கணித புள்ளிவிவரத்தில் முதுநிலைப் பட்டத்தையும் முடித்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1991-93 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தியூக் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் அறிஞராகவும், 1997-98 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் விஞ்ஞானியாகவும் இருந்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Faculty Dilip Nath". Retrieved 2 July 2025.
- ↑ "Assam university gets full time VC". Retrieved 2 July 2025.
- ↑ "Dilip Chandra Nath" (PDF). Retrieved 2 July 2025.
- ↑ "The united graduate school of agricultural science" (PDF). Retrieved 2 July 2025.
- ↑ "Faculty Dilip Nath". Retrieved 2 July 2025.