உள்ளடக்கத்துக்குச் செல்

திலீபன், இச்வாகு குலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலீபன்
குழந்தைகள்தீர்க்கபாகு, இரகு
அரசமரபுஇச்வாகு

திலீபன் அல்லது கட்வாங்கன் (Dilīpa, also known as Khaṭvāṅga or Khash), பரத கண்டத்தின் கோசல நாட்டை ஆண்ட இச்வாகு குல மன்னர் ஆவார்.இவர் இராமாயணக் காவியத்தின் நாயகனான இராமரின் முன்னோர் ஆவார். இவரது மகன் புகழ் பெற்ற மன்னர் இரகு ஆவார்[1]. இவரை வைத்தே இச்வாகு குலத்திற்கு இரகுவம்சம் எனப்பெயர் பெற்றது.

தொன்ம வரலாறு

[தொகு]

வசிட்டருடன் சந்திப்பு

[தொகு]

பத்ம புராணத்தின்படி ஒரு முறை திலீபன் மாமுனிவர் வசிட்டரை சந்தித்தார். அப்போது வசிட்டர் பரத கண்டத்தின் கங்கை போன்ற புனித ஆறுகளின் பெருமைகளை விவரித்தார்[1].

விரோசனன்

[தொகு]

அசுரர் குல தலைவரான விரோசனன் மற்றும் தேவர்களின் தலைவரான இந்திரனுடன் நடந்த போரில், இந்திரனால் விரோசனனை வெல்ல முடியவில்லை. விரோசனனை வெல்ல இந்திரன் திலீபனின் உதவியை நாடினான். திலீபன் ரக்தேஸ்வரி தேவியை உபாசித்து, விரோசனன் மீது அம்பு எய்தினான். வீரோசனன் உடம்பிலிருந்து வெளியேறிய இரத்தம், ஒரு சொட்டு கூட பூமியில் சிந்தாமல் ரக்தேஸ்வரி தேவி குடித்ததால், விரோசனன் போரில் உயிரிழந்தான்.[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Mani, Vettam (1975). Purāṇic Encyclopaedia: A Comprehensive Dictionary with Special Reference to the Epic and Purāṇic Literature. Motilal Banarsidass. pp. 241–242, 410.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீபன்,_இச்வாகு_குலம்&oldid=4357945" இலிருந்து மீள்விக்கப்பட்டது