திலானி ஏக்கநாயக்க
திலானி ஏக்கநாயக்க | |
---|---|
![]() திலானி ஏக்கநாயக்க | |
பிறப்பு | திலானி அசோகமாலா ஏக்கநாயக்க மார்ச் 4, 1970 கொழும்பு, இலங்கை |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1990 - தற்பொழுது வரை |
வாழ்க்கைத் துணை | பிரியங்கரா பெரேரா |
பிள்ளைகள் | தில்மின் பெரேரா |
விருதுகள் | சிறந்த நடிக்கைக்கான சரசவ்விய விருது புகழ்பெற்ற நடிகைக்கான் சரசவ்விய விருது |
திலானி அசோகமாலா ஏக்கநாயக்க (Dilhani Ashokamala Ekanayake, (சிங்களம்: දිල්හානි ඒකනායක; பிறப்பு;மார்ச் 4, 1970) இலங்கையைச் சேர்ந்த விருதுபெற்ற திரைப்பட நடிகையும் தொலைக்காட்சி நாடக நடிகையும் ஆவார்.[1] பாலிவுட் படங்களின் கடுமையான போட்டி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் எழுச்சி ஆகியவற்றால் சிங்களத் திரைப்படத்துறை கடுமையான சரிவைச் சந்தித்த போதும், சிங்களத் திரையுலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்கவைத்த நடிகைகளுள் ஏகநாயக ஒருவராவார்.[2] இவர் இலங்கையின் ஸ்ரீதேவி என அறியப்படுகிறார்.[2]
குடும்பம்
[தொகு]ஏக்கநாயக்க இலங்கையின் கொழும்பிலுள்ள புனித கிளாரே பெண்கள் பள்ளியில் படித்தார்.[2] இவர் பாடகர் ஜெ. ஏ. மில்டன் என்பவரின் மகனான நடிகர் பிரியங்கரா பெரேரா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[2] இவருடைய மகன் தில்மின் பெரேரா ஆவார்.[3]
தொலைக்காட்சி நடிப்பு
[தொகு]திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுதே இவர் தொலைக்காட்சி நாடகங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் விளங்கினார். மாயா ரங்கா, சுவர்ன கிங்கிணி, மீதுமா ஆகிய தொலைக்காட்சி நாடகங்களில் தனித்துவமான இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இலங்கையின் திரை நட்சத்திர விழாவான ரிடீ ரேயாக் என்ற விழாவில் இவர் முக்கிய கதாபாத்திரமேற்று நடித்தார். இந்நிகழ்ச்சி இலங்கையில் ஆண்டுக்கொருமுறை நிகழும் புகழ்பெற்ற நிகழ்ச்சியாகும்.[2] ரன்வீரு ரியல் ஸ்டார், மெகாஸ்டார், ஆகிய நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்தார். தற்பொழுது தவாலா தூவீலி, தேவியா சுகாலா ஆகிய தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வருகிறார். இவர் லக்ஸ் சோப்பின் விளம்பரத் தூதுவர் ஆவார்.
திரைப்படத்துறை
[தொகு]1989இல் திரைப்படத்துறையில் நுழைந்த ஏக்கநாயக்க நடித்த முதல் படம் யாஸ்பாலித நாணயக்காரா என்பவரின் இயக்கத்தில் வெளிவந்த தெதுன்ன சாமநாளியக் என்ற படமாகும். 2005 இல் இலங்கையில் நடைபெற்ற சரசவ்விய திரைப்பட விழாவில் , சரசவ்விய விருதுக்கான சிறந்த நடிகை விருது பெற்றார். மேலும் மேக வாம் அதா, சுலங்கா, மே மேக சந்தை, சூடு காலு சாகா ஆளு, பேம் கேக்குல, மாயா ரங்கா (தொலைக்காட்சி நாடகம்), சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியான தாவாலா தூவாலி ஆகியவற்றில் ஏக்கநாயக்க தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தொடக்கத்தில் வணிக ரீதியான படங்களில் நடித்தார். இவருடைய நடனமாடும் திறமையும், புன்னகையும் ரசிகர்களைக் கவர்ந்தது. இவர் இலங்கையின் ஸ்ரீதேவி என அறியப்படுகிறார். அசோக ஹந்தகமா என்பவரின் மீ மக சண்டை என்ற படத்தில் இவர் தமிழ்ப் பெண் கதாப்பாத்திரமேற்று மாறுபட்ட வேடத்தில் தன் நடிப்பை வெளிப்படுத்தினார்[2] .
மேற்கோள்
[தொகு]- ↑ "Dilhani Ekanayake Biography". imdb.com. Retrieved 23 சனவரி 2019.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Dilhani Ashokamala Ekanayake Biography". Retrieved 23 சனவரி 2019.
- ↑ "Dilhani Ekanayaka's son and family". Lankahelp.com. Archived from the original on 8 மே 2015. Retrieved 23 May 2015.