திறமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இயல்திறன் அல்லது திறமை (aptitude) என்பது ஆற்றலுக்கான ஒரு கருவி. ஒரு வேலையை குறிப்பிட்ட நிலையில் செய்து முடிக்கத் தேவைப்படும் ஆற்றல் எனக் கூறலாம். சிறந்த திறனை "திறமை" என்று கருதலாம். திறன் என்பது புலன் அல்லது மனம் சார்ந்த ஒன்று. இயல்திறன் என்பது பிறப்போடு பெறப்பட்ட ஆற்றல், ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதற்கு தேவைபடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறதா அல்லது வளர்ச்சியடையாமல் உள்ளதா என்பதாகும். மேலும் திறன் அறிவு, புரிதல், கற்றல் அல்லது பெற்ற திறமைகள் (திறன்கள்) அல்லது அணுகுமுறை ஆகியவற்றை உருவாக்குகிறது. அறிவாற்றல் இயல்பான திறமை மற்றும் சாதனைக்கு முரணாக இருக்கிறது, இது அறிவு அல்லது திறனைக் கற்றல் மூலம் பெறப்படும் திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.[1]

கிளாடுவில்(2008)[2] மற்றும் கோல்வின்(2008)[3] ஆகியோரின் கூற்றுப்படி, ஒரு சிறந்த செயல்திறனைத் திறமையின் அடிப்படையிலோ அல்லது கடுமையான பயிற்சியின் அடிப்படையிலோ பிரித்துப் பார்ப்பது மிகக் கடினமான ஒன்று. திறமையானவர்கள் எப்போதும் தங்களது சிறந்த திறனை சில முயற்சிகளிலோ[4] அல்லது வகையிலோ அல்லது ஒரே வழிகாட்டுதல் மூலமோ வெளிப்படுத்த முடியும்.[5][6]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறமை&oldid=2949865" இருந்து மீள்விக்கப்பட்டது