உள்ளடக்கத்துக்குச் செல்

திறப்பு விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க முன்னால் முதல் பெண்மணி லார புஷ் ஒரு விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தபோது[1]

திறப்பு விழா (ribbon-cutting ceremony) என்பது ஒரு புதிய கட்டிடம் அல்லது வியாபாரத்தினைப் பொதுமக்கள் உபயோகத்திற்குத் துவங்கி வைக்கும் ஒரு பொதுவிழா ஆகும். வண்ணநாடா வெட்டி திறந்து வைத்தல், கல்வெட்டுகளைத் திறந்து வைத்தல் என்ற இரு முறைகள் திறப்பு விழாவில் பின்பற்றப்படுகின்றன.

வியாபாரத்திற்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளும் முடிந்த பின்பு, நல்ல நாள், நேரம் பார்த்து வியாபாரக் கட்டிடத்தின் கதவில் வண்ணநாடா வெட்டப்படுகிறது. அதன் பின்பு வியாபாரம் தொடங்கப்படுகிறது. இந்தத் திறப்பு விழா முறை இந்தியாவிலும், பிற வெளிநாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது.

அரசு சார்ந்த கட்டிடங்கள், மருத்துவமனைகள், பாலங்கள் போன்றவற்றினை அத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அல்லது அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்கள் திறக்கின்றார்கள். ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ள கட்டிடங்களைத் திறந்து வைக்க காணொளிக் கருத்தரங்கு முறையும் பின்பற்றப்படுகிறது. தனியார் வியாபார நிறுவனங்களைத் திறக்க அருகிலுள்ள பிரபலங்கள், மக்கள் சேவகர்கள், திரைப்பட கலைஞர்கள் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திறப்பு_விழா&oldid=3216678" இலிருந்து மீள்விக்கப்பட்டது