திறன் குத்தகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திறன் குத்தகை (அல்லது திறன் ஒப்பந்தம், ஆங்கிலத்தில் Smart Contract), என்பது எண்ணிம ஒப்பந்தமாகும். இதன் வாயிலாக பரிமாற்றங்கள் மூன்றாம் ஆட்களின் தலையீடு இன்றி இலகுவாக நடக்கும். இவ்வகையான குத்தகையில் பரிமாற்றங்களை மாற்றவோ அழிக்கவோ இயலாது. இவற்றின் நிலையை எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.[1] நிக் சபோ என்பவரால் 1994-ம் ஆண்டு இத்திறன் குத்தகை அறிமுகம் செய்யப்பட்டது.[2]

இத்திறன் குத்தகைகள் கணினி நிரலியின் வாயிலாக உருவாக்கப்படுகின்றது. எண்ணிம நாணயங்கள் இவ்வகையான திறன் குத்தகைகளை பயன்படுத்துகின்றன.

வரலாறு[தொகு]

தற்போதுள்ள திறன் குத்தகைகள் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன.[3] திறன் குத்தகைகள் பொதுவாக தொடரேடு அல்லது பரவாலக்கப்பட்ட ஏட்டில் இயங்குகின்றன. ஈத்தரீயம்[4] கணினி நிரலில் இயங்கக்கூடிய திறன் குத்தகையை உருவாக்க வழிவகை செய்துள்ளது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறன்_குத்தகை&oldid=3679617" இருந்து மீள்விக்கப்பட்டது