திறன் அடிப்படையிலான முழுமையான மதிப்பீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திறன் அடிப்படையிலான முழுமையான மதிப்பீடு[தொகு]

திறன் அடிப்படையிலான முழுமையான மதிப்பீடு என்பது குழந்தைகளின் அறிவு வளர்ச்சி,திறன் வளர்ச்சி மற்றும் மனப்பான்மை அனைத்தின் வளர்ச்சிகளையும் வருடம் முழுவதும் தொடர்ச்சியாக அளந்தறிந்து ,திறனடைவு குறைபடுகளை நீக்கி, முழுமையான திறன் அடைவுகளைப் பெறச்செய்வதே ஆகும். கல்வியின் குறிகோள் குழந்தைகளின் முழு ஆளுமை வளர்ச்சியே ஆகும். கருத்துகள் அனைத்தும் செயல்பாடுகளாக மாற்றபட்டு பின் கற்றல் அனுபவங்களாக மாற்றபடவேண்டும். அறிவு வளர்ச்சி,திறன் வளர்ச்சி மற்றும் மனப்பான்மை அனைத்தும் குழந்தைகளிடம் வளர்ச்சி அடையவேண்டும்.

திறன் அடிப்படையிலான முழுமையான மதிப்பீட்டின் குறிகோள்கள்[தொகு]

1.மதிப்பெண்களுக்கு முக்கியம் தராமல் திறன் அடைவிற்கு முக்கியம் தருதல். 2.திறன் அடைவை முழுமையாக,தொடர்ச்சியாக அளந்தறிதல். 3.சுயமதிப்பீட்டிற்கான வாய்ப்புகளை அதிகரித்தல். 4.தன்னம்பிக்கையை வளர்த்தல். 5.குறைதீர் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

திறன் அடிப்படையிலான முழுமையான மதிப்பீட்டின் நிறைகள்[தொகு]

1.மதிப்பெண்கள் பயம் குழந்தைகளிடம் இல்லை. 2.கற்பித்தல் நோக்கம் சார்ந்த குழந்தைகளின் வளர்ச்சியை அறிய இயலும். 3.குழந்தைகளின் முழு அளுமை வளர்ச்சிக்கு பயன்படுகிறது. 4.குறைதீர் கற்பித்தல் மேற்கொள்ளப்படுகிறது. 5.குழந்தைகள் தங்களின் திறனடைவு சார்ந்த வளர்ச்சியினை அறிந்துகொள்ள முடிகிறது.

சான்றுகள்[தொகு]

1. MANAGING EDUCATIONAL CHALLENGES by Dr.HEMALATHA TALESRA, AUTHORS PRESS, NEWDELHI. Page No.108 2. CURRICULUM PLANNING FOR ELEMENTARY EDUCATION by H.HUSAIN, ANMOL PUBLICATION PRIVATE Ltd., NEWDELHI. Page No.177 - 180.