திறந்தவெளி பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திறந்தப் பல்கலைக்கழகம்

எழுத்தறிவு தொடங்கி உயர்நிலை வரை கல்வியின் எல்லாக் கட்டங்களிலும் சமவாய்ப்பினைத் திறந்த வெளிப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. தொடக்கப் பயிற்சி அடிப்படைக் கல்வி என்பவை இக்கல்வி முறையில் அமைந்துள்ளன. திறந்த வெளிப்பயிற்சித்திட்டம் எட்டாம் வகுப்பிற்குச் சமமானது.அடிப்படைத்திட்டம் பதினொன்றாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு ஈடானது. எழுத்தறிவு கூட இல்லாதவர்களும் திறந்தவெளிப்பல்கலைக்கழகத்தின் மூலம் படிப்படியே பட்டப்படிப்பு வரை கற்கலாம் என்பது இம்முறையின் சிறப்பாகும். கல்வித்துறையில் இக்காலத்தில் மேற்கொண்ட புதிய முயற்சியே திறந்தவெளிப்பல்கலைகழகங்களாகும். புல்கலைக்கழகங்களுக்குசி சமுதாயப்பொறுப்புகள் மிகவுண்டு. எனவே கல்வியை ஜனநாயகப் பண்புடையதாகவும்ääபொதுவுடமையானதாகவும் ஆக்குவதற்குத் திறந்த வெளிப்பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. [1]

  1. குட்லக் பதிப்பகம்-மதுரை