திறநிலை வடிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திறநிலை வடிவம் (Open format) என்பது கோப்பு வடிவங்களுள் ஒன்றாகும். இநில் கணியத் தரவுகளைச் சேமிக்கப் பயனாகிறது. அத்தரவானது, வரையறுக்கப்பட்டத் தனிக் குறிப்பீடுகளைக் கொண்டவையாகும். அக்குறிப்பீடுகளை, உரிய சீர்தர அமைப்பகம் கட்டிக்காக்கிறது. மேலும், அக்குறிப்பீடுகளை யார் வேண்டுமானலும், பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும் செய்ய இயலும் என்பது முக்கியக் கூறாகும். எடுத்துக்காட்டாக, இதன் சீர்தரக் குறிப்பீடுகளைத் திறநிலை, கட்டற்ற, தனியுடைமை மென்பொருள் உருவாக்குனர்களால் பின்பற்ற இயலும். அத்துடன், பல்வேறு வகை மென்பொருள் உரிமங்களையும் தர இயலக்கூடியதாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது. ஒரு மென்பொருள் உருவாக்குனர், தமது விருப்பத்திற்கு ஒப்ப, இந்த திறநிலை வடிவங்களைப் பயன்படுத்தும் போது, அதற்கு நிதியோ, கட்டணமோ தர வேண்டியதில்லை. [1]

திறநிலை வடிங்களில் குறிப்பிடத்தக்கவை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Free File Format Definition". LINFO.org. http://www.linfo.org/free_file_format.html. பார்த்த நாள்: 2018-சூலை-09. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திறநிலை_வடிவம்&oldid=2551106" இருந்து மீள்விக்கப்பட்டது