திறக்கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திறக்கோயில்

Thirakoil hill.JPG

இடம்

திருவண்ணாமலை, இந்தியா

ஆய

12°27'09"N 79°29'55"E / 12.4525°N 79.4986°E / 12.4525; 79.4986

வகை

கலாச்சாரம்

மாநில கட்சி

 இந்தியா

India location map.svg
Red pog.svg
இருப்பிடம்: தமிழ்நாடு, இந்தியா

இந்தியாவின் ஒரு மாநிலம் தமிழ்நாடு. அதில் திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் தாலுகாவில் உள்ள  ஒரு கிராமம் திறக்கோயில். இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம் ஆகும்

சொற்பிறப்பியல்[தொகு]

துறுகல் என்ற சொல்லில் இருந்து  இந்த ஊர்  பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது.  துறுகல்   என்பதன் பொருள் கல் ஆகும் . பின்னர் அது திறக்கோல் என மாற்றப்பட்டது. பிறகு அது திறக்கோயில் என மாறியதாக நம்பப்படுகிறது.

தகவல்[தொகு]

செதுக்கப்பட்டக் குகை
  • இடத்தின் பெயர்  = திறக்கோயில்
  • தாலுகா = தெள்ளார்
  • மாவட்டம் = திருவண்ணாமலை
  • மாநிலம் = தமிழ்நாடு
  • நாடு = இந்தியா
  • ஆய = 12°27'9"N 79°29'55"E
  • பரப்பளவு = 1 கி. மீ.2
  • மக்கள் தொகை = 953 (2011)

இடம்[தொகு]

வந்தவாசியின் தென்மேற்ககில் ,15 கி. மீ தொலைவிலும் பொன்னுாரின் தத்துவ மையத்திலிருந்து 7 கி. மீ. தொலைவிலும் திறக்கோயில் ஊர் அமைந்துள்ளது. திறக்கோயில் மலையானது 1 கி. மீ., வடகிழக்கு திசையில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

அருகில் உள்ள தேசூர் மற்றும் கீழ்புதுார் ஆகிய இடங்களுக்குச் செல்ல தனியார் பேருந்து வசதிகள் மட்டுமே இருக்கின்றன. திறக்கோயிலை அடைய ஒரு கி. மீ நடக்க வேண்டும்.

திறக்கோயில் மலை மற்றும் திகம்பர சமணக் கோயில்[தொகு]

தற்போது இந்த மலையில் மூன்று சிறிய குகைகள் உள்ளன. அதில் ஒன்று மலையின் தென்பகுதியின் மையத்திலும் மற்ற இரண்டு மலைக்கு மேற்கு மற்றும் கிழக்கு பக்கங்களிலும் உள்ளன. இந்த குகைகள் 8 ஆம் நூற்றாண்டில் சமணத் துறவிகளால் பயன்படுத்தப்பட்டது. இந்த குகைகள் இயற்கையாக சமணத் துறவிகள் வாழ்வதற்கு ஏற்ப அமைந்து  இருந்தன.   இக்குகை ஒரே கல்லால் ஆனது; 25 அடி உயரம் உடையது. நான்கு பக்கங்களிலும் நன்றாக செதுக்கப்பட்ட நான்கு தீர்த்தங்கரர் சிலைகள் (மகாவீரர், பார்சுவநாதர், ரிஷபநாதர், சந்திரநாதர்) உள்ளன. 10 ஆம் நூற்றாண்டுவரை தண்டபுரம் என அழைக்கப்பட்டது. முதலாம் இராஜராஜ சோழனின் கி. பி 1007 கல்வெட்டுகள், இந்தக் குகையின் வாழ்விடங்களை சங்கரைப் பள்ளி மற்றும் மை சுத்தப் பள்ளி என குறிப்பிடுகிறது. இங்கு சமீபத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலில் மகாவீரர் சிலை வழிபாடு நடைபெறுகிறது.

பழைய மற்றும் புதிய படிகள்

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறக்கோயில்&oldid=2723603" இருந்து மீள்விக்கப்பட்டது