திர் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


திர் அருங்காட்சியகம் (Dir Museum) சாக்தாரா அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படும் இது பாக்கித்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபர் பக்துன்வாவில் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகம் காந்தாரக் கலையின் சிறந்த மற்றும் தனித்துவமான தொகுப்பை வழங்குகிறது. [1]

அகழ்வாராய்ச்சி[தொகு]

இந்தப்பகுதியில் 1966-1969 காலப்பகுதியில் பெசாவர் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையின் கீழ் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பல சேகரிப்புகள் கிடைத்தது. இந்த அருங்கட்சியகம் அப்போதைய மாநில அரசால் கட்டப்பட்டது, கட்டுமானத்தை கேப்டன் ரகாதுலா கான் ஜரால் (அப்போதைய திர் பகுதியின் அரசியல் முகவர்) முன்மொழிந்தார். கட்டுமானத்திற்காக 0.25 மில்லியன் தொகையை ஒதுக்கப்பட்டது. பின்னர் மாகாண அரசாங்கம் அருங்காட்சியகத்தில் எல்லைச் சுவர், குடியிருப்பு, விருந்தினர் மாளிகை, சேமிப்பு மற்றும் பிற வசதிகளை நிர்மாணிப்பதற்காக மேலும் 0.49 மில்லியன் நிதியை ஒதுக்கியது. [2]

வரலாறு[தொகு]

இந்த அருங்காட்சியகம் திர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இது வரலாற்று ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் மிக முக்கியமானது. இதன் வரலாறு கிமு 2ஆம் ஆயிரமாண்டுக்குச் செல்கிறது. கிமு 6 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான தைமர்கரா மற்றும் பிற இடங்களில் ஆரியர்களின் ஏராளமான அடக்கங்களை அகழ்வாராய்ச்சியின் மூலம் வரலாற்றின் சான்றுகள் பெறப்பட்டன. பின்னர் அகாமனிசியப் பேரரசைப் பற்றிய வரலாறு கிடைத்தது. கிமு 327 இல் பேரரசர் அலெக்சாந்தரின் படையெடுப்பால் அக்கமனிசியர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் உள்ளூர் மக்களை வென்றெடுப்பதில் பெரும் சிக்கலையும் அவர் எதிர்கொண்டார். அதன் பிறகு கிரேக்கர்கள் காந்தார நாகரிகத்தைப் பின்பற்றி ஒரு பெரிய புகழைப் பெற்றனர். மேலும் பௌத்த ஸ்தூபங்கள் மற்றும் மடங்களின் நினைவுச்சின்ன எச்சங்களை விட்டுச் சென்றதன் மூலம் அங்கு மிக முக்கியமான காலகட்டத்தைக் கொண்டுள்ளனர். அவற்றில் சில அருங்காட்சியகத்தில் உள்ளன. [3]

திர் வரலாறு[தொகு]

காந்தாரக் கலையின் மையமாக திர் பகுதிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. யாத்ரீகர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் காந்தாரம் " மணம் மற்றும் அழகின் நிலம் " என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பகுதியில் மேற்கில் சிந்து ஆறு மற்றும் வடக்கே காபூல் நதி போன்ற மிக முக்கியமான இடங்கள் உள்ளன. இதில் பெசாவர், சுவத் , திர் மற்றும் பசௌர், மற்றும் பஞ்சாபில் கிழக்கில் தட்சசீலப் பள்ளத்தாக்கு, மற்றும் பாக்கித்தான், மேற்கு நோக்கி ஆப்கானித்தானின் அடா மற்றும் பாமியான் வரை நீண்டுள்ளது. எனவே காந்தார நாகரிகத்தின் எச்சங்களால் திர் பகுதி நிரம்பியுள்ளது. [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Chakdara Museum". www.dostpakistan.pk.
  2. "Dir Museaum". kpktribune.com. Archived from the original on 2018-04-30. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
  3. "Upper Dir Museum". www.upperdir.pk. Archived from the original on 2017-12-21. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.
  4. "Dir museum History". www.kparchaeology.com. Archived from the original on 2020-09-21. பார்க்கப்பட்ட நாள் 2020-08-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திர்_அருங்காட்சியகம்&oldid=3613762" இலிருந்து மீள்விக்கப்பட்டது