திரௌபதி கிமிரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் திரௌபதி கிமிரேவுக்கு 2011 ஆம் ஆண்டு விருது வழங்கும் நிகழ்வு

திரௌபதி கிமிரே (Draupadi Ghimiray) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலராவார். இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது இவருக்கு 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.[1]

தொழில் ரீதியாக கிமிரே ஒரு செவிலியராவார். உடல் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உதவுவதற்கும் அவர்களுக்கு விரிவான சேவையை வழங்குவதற்கும் கிமிரே 1999 ஆம் ஆண்டு இத்தொழிலை எடுத்துக் கொண்டார். சிக்கிமில் ஊனமுற்றோரின் நலனுக்காக கிமாரே சிக்கிம் விக்லாங் சகாயதா சமிதி என்ற அமைப்பை நிறுவினார். இன்று, இவரும் இவரது தன்னார்வ தொண்டு நிறுவனமான சிக்கிம் விக்லாங் சகாயதா சமிதியும் இப்பகுதி மக்களிடையே அவர்கள் வீட்டுப் பெயராக மாறிவிட்டது.[2]

செயற்கை கால்கள், கைகள் பொருத்தப்பட்ட குழந்தைகளுக்கும், அன்னம் பிளவுக்கு சிகிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கான இலவச அறுவை சிகிச்சைக்கும் கிமிரே பெரிதும் உதவினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards". Padma Awards, Government of India.
  2. Padma Awards 2019: Social, Environment, Animal Welfare, Education Categories; wannathankyou; 28th Jan. 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரௌபதி_கிமிரே&oldid=3161696" இருந்து மீள்விக்கப்பட்டது