உள்ளடக்கத்துக்குச் செல்

திரோசென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரோசென்
Τροιζήνα
ஒர்தோலிதி மலை
ஒர்தோலிதி மலை
அமைவிடம்

No coordinates given

பிராந்திய அலகுக்குள் அமைவிடம்
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: அட்டிக்கா
மண்டல அலகு: தீவுகள்
நகராட்சி: திரொய்சினியா-மெத்தானா
மாவட்டங்கள்: 8
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
சிற்றூர்
 - மக்கள்தொகை: 673
நிர்வாக அலகு
 - மக்கள்தொகை: 5,486
 - பரப்பளவு: 190.697 km2 (74 sq mi)
 - அடர்த்தி: 29 /km2 (75 /sq mi)
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
உயரம் (மத்தியில்): 23 m (75 ft)
அஞ்சல் குறியீடு: 180 20
தொலைபேசி: 22980
வலைத்தளம்
www.dimos-trizinas.gr

திரோசென் (Troezen, பண்டைய கிரேக்கம் : Τροιζήν, நவீன கிரேக்கம் : Τροιζήνα ) என்பது கிரேக்கத்தின் வடகிழக்கு பெலோப்பொனேசியாவில், ஆர்கோலிட் தீபகற்பத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் மற்றும் ஒரு முன்னாள் நகராட்சி ஆகும். 2011 உள்ளாட்சி சீர்திருத்தத்தத்திற்கு பிறகு இது திரொய்சினியா-மெத்தானா நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போது இது நகராட்சியின் ஒரு அலகு ஆகும். இது தீவுகளின் பிராந்திய அலகின் ஒரு பகுதியாகும்.[2]

திரொசென் நகரமானது பிரேயசின் தென்மேற்கில், சரோனிக் வளைகுடாவில் மற்றும் மெத்தனாவுக்கு தெற்கே சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இந்த முன்னாள் நகராட்சியின் தலைமையகம் (மக்கள் தொகை. 6,507) கலாட்டாசில் இருந்தது. 2011 க்கு முன்பு, திரொய்சினா முன்னாள் மாகாணமான பிரேயஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது (பண்டைய காலத்தில் இது ஆர்கோலிசின் ஒரு பகுதியாக இருந்தது). நகராட்சி 190.697  கிமீ² நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.[3] இந்த நகராட்சிக்கு உட்பட்ட பெரிய ஊர்கள் மற்றும் கிராமங்கள் (2011 இல் மக்கள் தொகை. 2,195), கல்லோனி (மக்கள் தொகை. 669), திரொய்சினா (மக்கள் தொகை. 673), தக்டிகோபோலி (250), காரட்சாஸ் (287), திரையோபி (239), அஜியோஸ் ஜார்ஜியோஸ் (228), அஜியா எலினி (159) ஆகியவை ஆகும். இவை அல்லாது பல சிறிய குடியிருப்புகளும் உள்ளன.

தொன்மம்[தொகு]

கிமு 325-300 காலகட்டத்தைச் சேர்ந்த, திரொசென் நாணயம். முன்பக்கம்: டைனியா அணிந்திருக்கும் அதீனாவின் தலை. பின்பக்கம்: அலங்கரிக்கப்பட்ட திரிசூலத் தலை

கிரேக்கத் தொன்மவியல்படி, இரண்டு பண்டைய நகரங்களான ஐபீரியா மற்றும் அன்தியா ஆகியவை பித்தியசால் ஒன்றிணைக்கப்பட்டு திரோசன் நகரம் உருவானது. அவர் இறந்த தனது சகோதரரான திரோசெனின் நினைவாக புதிய நகரத்திற்கு அவரின் பெயரிட்டார்.[4]

திரோசனில்தான் பித்தேயசின் மகளான ஏத்ரா, ஏஜியஸ் மற்றும் பொசைடன் ஆகிய இருவருடனும் ஒரே இரவில் படுத்து சிறந்த கிரேக்க வீரனான தீசுசை கருவில் சுமந்தாள். ஏதென்சுக்குத் திரும்புவதற்கு முன், ஏஜியஸ் தனது செருப்புகளையும் வாளையும் திரோசனில் ஒரு பெரிய பாறையின் அடியில் வைதாள். அந்தப் பாறையை நகர்த்தி குழந்தை தன்னை நிரூபிக்க முடிந்தால், அந்த பொருட்களை ஏதென்சில் உள்ள தன் தந்தையிடம் கொண்டுவந்து தருமாறு கேட்டுக் கொண்டாள். தீசஸ் உரிய வயது வந்தவுடன் பாறாங்கல்லை தூக்கினார்.[5]

வரலாறு[தொகு]

இப்போலிட்டசின் தொன்மத்தை சார்ந்து பண்டைய நகரத்தின் வழிபாட்டு முறை உருவாக்கப்பட்டது. திரோசன் நகர பெண்கள் பாரம்பரியமாக தங்கள் திருமணத்திற்கு முன்பு அவருக்கு தங்கள் தலைமுடியை காணிக்கையாக்கினர்.

மாக்னா கிரேசியாவில் உள்ள சைபரிசில் ஒரு திரொசெனியன் குடியிருப்பு (கிமு 720 இல்) நிறுவப்பட்டது.[6]

சலாமிஸ் போருக்கு முன் (கிமு 480), ஏதெனியன் அரசியல்வாதியான தெமிஸ்டோக்ளீசின் அறிவுறுத்தலின் பேரில் ஏதெனியன் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்புக்காக திரோசெனுக்கு அனுப்பப்பட்டனர். 1959 ஆம் ஆண்டில், திரோசனில் உள்ள ஒரு காபி கடையில் ஒரு சிற்பத்தூண் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஏதென்சை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவதற்கான உத்தரவை தெமிஸ்டோக்கிள்ஸ் ஆணையை இடுவதை சித்தரிக்கிறது. சலாமிஸ் போர் நடந்த சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இந்த கல்வெட்டு உள்ளது இது அசல் சின்னத்தின் நினைவு நகலாக இருக்கலாம் என்பதாக அறியப்படுகிறது.

இசிசு கோயில் திரோசனில் உள்ள அலிகார்னாசியர்களால் கட்டப்பட்டது. ஏனெனில் இது அவர்களின் தாய் நகரமாக இருந்தது. ஆனால் இசிசுவின் உருவம் திரோசென் மக்களால் அர்ப்பணிக்கப்பட்டது. இந்நகரம் பழங்காலத்தில் அப்பல்லோனியா ( பண்டைக் கிரேக்கம்Ἀπολλωνία ) என்ற பெயரைக் கொண்டிருந்தது.

நடுக்காலத்தில், இது தமாலா (Δαμαλᾶ) என்று அறியப்பட்டது.

குறிப்புகள்[தொகு]

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. "ΦΕΚ B 1292/2010, Kallikratis reform municipalities". Government Gazette.
  3. "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece.
  4. Pausanias, Description of Greece, 2. 30. 9
  5. Pseudo-Apollodorus, Bibliotheca 3. 15. 7
  6. "Sybaris | ancient city, Italy".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரோசென்&oldid=3476542" இலிருந்து மீள்விக்கப்பட்டது