உள்ளடக்கத்துக்குச் செல்

திரையோபியோப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரையோபியோப்சு
திரையோபியோப்சு பிலிப்பினா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
கொலுபிரிடே
பேரினம்:
தெண்ட்ரிலேபிசு
இனம்:
தெ. திரிசுடிசு
இருசொற் பெயரீடு
தெண்ட்ரிலேபிசு திரிசுடிசு
பவுலெஞ்சர், 1896
சிற்றினம்
  • திரையோபியோப்சு பிலிப்பினா பவுலெஞ்சர், 1896
  • திரையோபியோப்சு உரூபெசென்சசு (கிரே, 1835) (மாதிரி)

திரையோபியோப்சு (Dryophiops) என்பது கொலுபிரிடே குடும்பத்தைச் சேர்ந்த சவுக்கை பாம்புகளின் பேரினமாகும். இப்பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[1] இவை தென்கிழக்காசியாவில் உள்ள காடுகளில் காணப்படும் மரங்களில் காணப்படும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

திரையோபியோப்சு பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உள்ளன. இவை தென்கிழக்காசியா, இந்தோனேசியாவின் பிரதான நிலப்பரப்புகளில் காணப்படும். திரையோபியோப்சு உரூபெசென்சசு மாதிரி இனமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இப்பேரினத்தின் மற்றுமொறு சிற்றினம், பிலிப்பீன்சில் காணப்படும் திரையோபியோப்சு பிலிப்பினா.[1]

திரையோபியோப்சு என்பது அகீத்துலினே என்ற திராட்சை பாம்பு துணைக்குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரினங்களில் ஒன்றாகும். இதில் திரையோபியோப்சு அகீத்துல்லா, புரோகோத்துல்லா, பேரினத்துடன் நெருக்கமாக உள்ளது கீழே காட்டப்பட்டுள்ள கிளை வரைபடத்தில் தெளிவாகும்.[2]

குறுகிய மூக்கு பாம்பு

அகீத்துல்லா

புரோகோத்துல்லா

திரையோபியோப்சு

திரையோபியோப்சு உரூபெசென்சசு

திரையோபியோப்சு பிலிப்பினா

அகன்ற மூக்கு பாம்பு

தெண்ட்ரிலாபிசு

கிரைசோபெலா

விளக்கம்

[தொகு]

திரையோபியோப்சு பாம்புகள், அகீத்துல்லா, புரோகோத்துல்லா பேரினத்துடன் நெருங்கிய உறவினை நீளமான கூர்மையான மூக்குகளுடன், நீளமான மற்றும் பக்கவாட்டு சுருக்கப்பட்ட உடல் அமைப்பின் மூலம் பகிர்ந்து கொள்கின்றன. மேலும் இரட்டைப் பார்வைக்கு சிறப்பு வாய்ந்த கிடைமட்ட கண்மணியுடன் கூடிய பெரிய கண்களை உரையது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரையோபியோப்சு&oldid=4405435" இலிருந்து மீள்விக்கப்பட்டது