திரையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொண்டைநாட்டு மன்னன் திரையன்.
“தொண்டை நாடு சான்றோர் உடைத்து” என்பர். சான்றோர் தொண்டுள்ளம் படைத்தவர். தொண்டுள்ளம் படைத்தவர் வாழும் நாடு தொண்டைநாடு. தொண்டைநாட்டு அரசன் திரையன். நாகநாட்டிலிருந்து கடல்-திரையில் மிதந்து வந்த பிள்ளை ஆதலால் திரையன் எனப்பட்டான் என அறிஞர்கள் உய்த்துணர்கின்றனர்.

தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாட்டு பெரும்பாணாற்றுப்படை. இந்தப் பாடலில் இவன் பல்வேல் திரையன் எனப் போற்றப்படுகிறான்.[1]
இந்தப் பாட்டுக்குப் பிற்காலத்தில் எழுதிச் சேர்க்கப்பபட்ட வெண்பாவில் “கான் பயந்த கண்ணிக் கடுமான் திரையன்” எனப் போற்றப்பட்டுள்ளான்.

வேங்கட நாட்டு அரசன்
இந்தத் திரையன் திருவேங்கடமலைப் பகுதி நாட்டுக்கு அரசன்.[2]
பவத்திரி தலைநகர்
பொலம்பூண் திரையன் எனப் போற்றப்பட்ட இந்தத் திரையன் பவத்திரி என்னும் ஊரில் இருந்துகொண்டு செங்கோலோச்சி வந்தான்.[3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மலர்தலை உலகத்து மன்னுயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவருள்ளும் இலங்குநீர்ப் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் பல்வேல் திரையன் - பெரும்பாணாற்றுப்படை 37
  2. வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை - காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் பாடல் அகம் 85-9
  3. செல்லா நல்லிசை பொலம்பூண் திரையன் பவத்திரி அன்ன நலம் - நக்கீரர் பாடல் அகம் 340-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரையன்&oldid=2565963" இருந்து மீள்விக்கப்பட்டது