திரைப்படத் துறையில் பெண்கள்
திரைப்படத் துறையில் பெண்கள் (Women in Cinema Collective) என்பது சுருக்கமாக டபிள்யூ. சி. சி , எனவும் அறியப்படும் இது மலையாளத் திரைப்படத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கான ஒரு அமைப்பாகும்.[1]
உருவாக்கம்
[தொகு]மலையாளத் திரைப்படங்களில் பிரபல நடிகை ஒருவர் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கைத் தொடர்ந்து நவம்பர் 1,2017 அன்று, கேரளாவில் ஒரு சங்கமாக மகளிர் திரைப்பட கூட்டு அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.[2][3] இந்த அமைப்பு தவறான நடத்தைக்கு எதிராக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மலையாளத் திரைப்படத் துறையில் பாலின நடுநிலை நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் பெண் கலைஞர்களின் நலனுக்கான ஒருங்கிணைந்த குரலாக இருக்க விரும்புகிறது.
முக்கிய சாதனைகள்
[தொகு]அனைத்து மலையாளத் திரைப்படத் தயாரிப்பு பிரிவுகளிலும் உள் புகார்கள் குழுக்கள் அமைக்கப்படுவதை உறுதி செய்யவும், பணியிடத்தில் பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2013 ஐ கண்டிப்பாக அமல்படுத்தவும் கேரள உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை மகளிர் திரைப்படக் கூட்டு குழு கோரியது. அனைத்து திரைப்பட பிரிவுகளிலும் இச்சட்டத்தை பின்பற்ற கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தது-இது திரைப்படத் துறையில் பெண்கள் சங்கம் நிறுவப்பட்ட பின்னர் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.[4]
மலையாளத் திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய மாநில அரசால் அமைக்கப்பட்ட ஹேமா குழு அறிக்கை, முதலமைச்சரிடம் திரைப்படத் துறையில் பெண்கள் குழு விடுத்த கோரிக்கையின் நேரடி விளைவாகும். இந்தக் குழு தனது அறிக்கையை 2019 டிசம்பரில் அளித்தது. ஆனால் அந்த அறிக்கை ஆகஸ்ட் 2024 இல் தான் பொதுமக்களுக்கு கிடைத்தது. திரைப்படத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் 17 வகையான பாலின சுரண்டல்களை இந்த அறிக்கை விவரித்தது. இதில் ஆண் நடிகர்களின் பாலியல் துன்புறுத்தல் உட்பட, அது வெளியானவுடன் மாநிலத்தில் ஒரு பெரிய அரசியல் புயலை கட்டவிழ்த்துவிட்டது.
செயல்பாடுகள்
[தொகு]- பணிச்சூழல், பணியிடச் சுரண்டல் மற்றும் பாலினப் பாகுபாடு போன்ற பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றை நிவர்த்தி செய்யவும், ஒரு வருட கால தொடர் நிகழ்வுகளான மறுவாழ்வு முகாம்கள் நடத்தப்பட்டது. ஊடகங்கள், வழக்கறிஞர்கள், அதிகாரத்துவவாதிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய மற்றும் வெற்றிகரமான பெண்களை இந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் சிந்திக்கவும் இந்த திரைச்சீலை ஒன்று சேர்த்தது.
- திரைப்படங்களில் பெண்களின் பங்கைக் கொண்டாடும் வகையில் கண்காட்சிகளை நடத்துவதன் மூலமும், பெக்டெல் தேர்வில் தேர்ச்சி பெறும் மலையாளத் திரைப்படத்துறை ஆண்டு இறுதி விருதுகளை அறிவிப்பதன் மூலமும் டபிள்யூ. சி. சி விரும்புகிறது.[5]
- 18 மே 2017 அன்று, மலையாளத் திரைப்படத்துறை ஒரு முக்கிய திரைப்பட நடிகை சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து விசாரணை மற்றும் உடனடி நடவடிக்கை கோரி டபிள்யூ. சி. சி கேரள முதலமைச்சரிடம் ஒரு மனுவை அளித்தது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருந்தபோது, நடிகர் திலீப் மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான மலையாளத் திரைப்படத்துறை சங்கம் எடுத்த முடிவுக்கு பகிரங்கமாகக் கண்டித்து, அதற்கு எதிராக கிளர்ச்சியும் செய்தது.[6]
- அதிக பெண்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை வழங்கும் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான தொழில்நுட்ப படிப்புகளை மேலும் தொடங்கவும், அரசாங்கத்திற்குச் சொந்தமான திரைப்பட அரங்கங்களில் அதிக பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கவும் கேரள அரசைசங்கம் கேட்டுக் கொண்டது..[7]
- திரைப்படத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கான ஊதிய அமைப்பு மற்றும் நலத்திட்டங்களை முறைப்படுத்த அரசாங்கத்தின் தலையீட்டை சங்க உறுப்பினர்கள் கோரியுள்ளனர். அதாவது மகப்பேறு ஊதியம் மற்றும் குறைந்தது 30% பெண்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தயாரிப்புக் குழுக்களுக்கான வரி மானியங்கள் போன்றவை.
சர்ச்சைகள்
[தொகு]அம்மா மற்றும் டபிள்யூ. சி. சி உறுப்பினரான நடிகை பார்வதி மேனன், பெண்களுக்கு எதிராக விரோதமாக பேசும் வசனங்களைக் கொண்ட திரைப்படங்களை ஊக்குவிக்கக் கூடாது என்று வெளிப்படையாக கூறியவர்களில் ஒருவர். மூத்த நடிகர் மம்முட்டி கசாபா (2016) திரைப்படத்தை அத்தகைய ஒரு திரைப்படமாக அவர் குறிப்பிட்டார். மிகவும் மதிக்கப்படும் மற்றும் பரந்த ரசிகர்களைப் பின்தொடரும் மம்முட்டி போன்ற மூத்த நடிகர்கள் இனி சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இதுபோன்ற தவறான திரைக்கதைகளைக் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பார்வதி கேட்டுக்கொண்டார்.[8] பார்வதியின் கருத்து பெரும்பாலும் விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் திரைப்படத் துறையினரிடமிருந்து சில ஆதரவையும் பெற்றது. மேலும் அவர் சமூக ஊடகங்கள் மூலம் காயபடுத்தப்பட்டார். பார்வதியின் புகாரைத் தொடர்ந்து அவர்களில் இருவர் கேரளக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.[9]
இதே போன்ற முன்முயற்சிகள்
[தொகு]மேற்கோள்கள்திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு தனது சொந்த மகளிர் பிரிவை உருவாக்கியது.. புதிதாக உருவாக்கப்பட்ட மகளிர் பிரிவின் தலைவரான பாக்யாலட்சுமி, டபிள்யூ. சி. சி அதன் அணுகுமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதாக விமர்சித்தார். பல வழிகளில் டபிள்யூ. சி. சி க்கு உடன் இணையான சங்கமாகப் பார்க்கப்படும் இந்தப் புதிய மகளிர் பிரிவு, பெண் தொழில்நுட்ப வல்லுநர்களின் கவலைகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு தளமாகக் கூறப்படுகிறது, மேலும் அவர்கள் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுடன் நடுவர்களாகச் செயல்பட்டு அவற்றைத் தீர்த்து வைப்பார்கள்.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kayyalakkath, Aslah (2019-04-28). "Groundbreaking gender revolt in Malayalam Cinema". Maktoob (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-11-12.
- ↑ "Kerala's Women in Cinema Collective registers as society, to fight for gender parity". The News Minute. The News Minute. 2 November 2017. https://www.thenewsminute.com/article/keralas-women-cinema-collective-registers-society-fight-gender-parity-70931. பார்த்த நாள்: 27 December 2017.
- ↑ "Women in Cinema Collective will work for equal opportunity and dignity of women employees in Mollywood! – Times of India". The Times of India. 19 May 2017. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/women-in-cinema-collective-will-work-for-equal-opportunity-and-dignity-of-women-employees-in-mollywood/articleshow/58735741.cms. பார்த்த நாள்: 27 December 2017.
- ↑ "Film Production Units Have To Form ICC Under POSH Act: Kerala High Court Orders In WCC's Plea". Live Law. https://www.livelaw.in/top-stories/film-production-houses-responsible-to-form-icc-kerala-high-court-in-wccs-plea-seeking-redressal-mechanism-in-amma-194370.
- ↑ "'Punarvaayana': Women in Cinema Collective launches event series to celebrate 1 year". The News Minute. The News Minute. 18 May 2018. https://www.thenewsminute.com/article/punarvaayana-women-cinema-collective-launches-event-series-celebrate-1-year-81496. பார்த்த நாள்: 18 May 2018.
- ↑ Praveen, S. r (25 June 2018). "Women in Cinema Collective condemns AMMA’s decision to reinstate actor Dileep" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/kerala/women-in-cinema-collective-condemns-ammas-decision-to-reinstate-actor-dileep/article24252575.ece.
- ↑ "Parvathy Menon, Manju Warrier, Bhavana and others form Women in Cinema Collective". The Indian Express. The Indian Express. 4 June 2017. http://indianexpress.com/article/entertainment/regional/parvathy-menon-manju-warrier-bhavana-and-others-form-women-in-cinema-collective-4686196/. பார்த்த நாள்: 27 December 2017.
- ↑ "Parvathy calls Mammootty's Kasaba misogynistic, gets trolled by fans". https://indianexpress.com/article/entertainment/malayalam/parvathy-calls-mammootty-kasaba-misogynistic-gets-trolled-by-fans-4980774/.
- ↑ "Mammootty fans are sending Parvathy rape and death threats". https://www.dailyo.in/arts/parvathy-trolled-mammootty-kasba-vijay-dileep-online-abuse/story/1/21271.html.
- ↑ "Malayalam film industry gets another women's association: FEFKA rolls out women's wing" (in en-IN). 4 February 2018. https://www.thenewsminute.com/article/malayalam-film-industry-gets-another-womens-association-fefka-rolls-out-womens-wing-75866.
வெளி இணைப்புகள்
[தொகு]- முகநூலில் திரைப்படத் துறையில் பெண்கள்
- Women in Cinema Collective Official Website