உள்ளடக்கத்துக்குச் செல்

திரு. ஒலிம்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரு. ஒலிம்பியா இலச்சினை
திரு. ஒலிம்பியா இலச்சினை

திரு. ஒலிம்பியா (மிசுடர் ஒலிம்பியா, Mr. Olympia) என்பது உடல் கட்டுதல் துறையில் சிறந்து விளங்கும் ஆணழகர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது ஆகும். இதற்கான சர்வதேச உடல் கட்டுதல் போட்டி அல்லது ஆணழகன் போட்டியை சர்வதேச உடல் கட்டுதல் மற்றும் உடல் கோப்பு சம்மேளனம் (IFBB) வருடந்தோறும் நடத்துகிறது. இப்பட்டத்தை அதிகமுறை (8 முறைகள்) வென்றவர்கள் திரு. லீ கேனி (1984–1991) மற்றும் திரு. ரோனி கோல்மன் (1998–2005) ஆவார்கள். நடப்பு திரு. ஒலிம்பியா திரு. சே கட்லர் ஆவார். இதன் முதல் போட்டி 1965ஆம் வருடம் செப்டம்பர் 16ஆம் நாள் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரில் நடைபெற்றது, பட்டத்தை அமெரிக்காவின் லேரி ச்காட் தட்டிச் சென்றார். இதில் பெண்களுக்கான உடல் கட்டுதல் போட்டிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு. ஒலிம்பியா போட்டியில் கலந்து கொள்ள அடிப்படைத் தகுதிகள்

[தொகு]

வெற்றிகளின் எண்ணிக்கை வாரியாக பட்டியல்

[தொகு]
வெற்றிகள் பெயர் வருடம்
8 ரோனி கோல்மன் 1998–2005
லீ கேனி 1984-1991
7 ஆர்னோல்ட் ச்வார்செனேகர் 1970–1975, 1980
6 டோரியன் யேட்சு 1992–1997
4 ஜே கட்லர் 2006–2007, 2009-2010
3 செர்சியோ ஒலிவா 1967–1969
ஃப்ரான்க் சேன் 1977–1979
2 லாரி ச்காட் 1965-1966
ஃப்ரான்கோ கொலும்பு 1976, 1981
1 சமிர் பன்னவுட்Samir Bannout 1983
க்ரிசு டிகெர்சன் 1982
டெக்சுடர் சாக்சன் 2008

மேலும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரு._ஒலிம்பியா&oldid=2688057" இலிருந்து மீள்விக்கப்பட்டது