உள்ளடக்கத்துக்குச் செல்

திருவையாறு அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவையாறு அரண்மனை என்பது தமிழ்நாட்டின், தஞ்சை மாவட்டம், திருவையாறில் உள்ள ஒரு அரண்மனையாகும். இந்த அரண்மனையானது திருவையாறில் காவிரி ஆற்றுப் பால வலது கரையில், தஞ்சாவூர் மராத்தியர் காலத்தில் சகாஜியால் கட்டப்பட்டது ஆகும். இந்த அரண்மனையில் பத்துக்கும் அதிகமான அறைகள் உள்ளன. சில அறைகளில் சிதைந்த நிலையில் பழங்கால ஓவியங்களும் உள்ளன. இந்த அரண்மனைக்கும், தஞ்சைப் பெரிய கோயிலுக்கும் பழங்காலத்தில் சுரங்கப்பாதை இருந்துள்ளது என்றும். தற்போது இந்த சுரங்கப்பாதை அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.[1] அரண்மனையானது தற்போது தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மூன்று நாட்கள் பிரக்ருதி பவுண்டேசன் சார்பில் மரபு மாறா இசை நிகழ்ச்சி என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "திருவையாறு அரண்மனையில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆய்வு". செய்தி. தினமணி. 1 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2018.
  2. "ரன்வீர் ஷாவின் திருவையாறு அரண்மனையில் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் ஆய்வு!". செய்தி. ஆனந்த விகடன். 1 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவையாறு_அரண்மனை&oldid=3680978" இலிருந்து மீள்விக்கப்பட்டது