திருவெளிச்சை ஆஞ்சநேயர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவெளிச்சை ஆஞ்சநேயர் கோயில் என்பது சென்னை மாவட்டம் திருவெளி்ச்சை எனுமிடத்தில் அமைந்துள்ளதாகும்.[1] இந்தக் கோயில் சற்குரு சதாசிவ பிரம்மேந்திரர் எனும் சித்தரால் அடையாளம் காட்டப்பட்டது. பாகவதபுரம் எனும் ஊரில் பிறந்த சித்தர் இவர்.

இக்கோயிலில் பசுபதீசுவர், சித்தி விநாயகர், சிவசுப்ரமணியர், சுந்தர வரதராஜர், கனக வல்லி, பிரத்தியங்கரா தேவி மற்றும் வள்ளலார் ஆகிய தனிச்சந்நிதிகள் உள்ளன.

இக்கோயிலில் ராமரும் சீதையும் லட்சுமணருடன் உள்ளனர். அவர்களை வணங்கியவாறு ஆஞ்சநேயர் உள்ளார்.

திருவிழாக்கள்[தொகு]

அனுமன் ஜெயந்தி புரட்டாசி சனிக்கிழமை

ஆதாரங்கள்[தொகு]

  1. http://temple.dinamalar.com/New.php?id=1848