உள்ளடக்கத்துக்குச் செல்

பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவெண்பாக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில்
பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில்
பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில்
புவியியல் ஆள்கூற்று:13°12′29″N 79°52′44″E / 13.2081°N 79.8788°E / 13.2081; 79.8788
பெயர்
புராண பெயர்(கள்):திருவெண்பாக்கம்
பெயர்:பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:பூண்டி
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஊன்றீசுவரர், ஆதாரதாண்டேசுவரர்
தாயார்:மின்னொளியம்மை, கடிவாய்மொழியம்மை
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சுந்தரர்

திருவெண்பாக்கம் - ஊன்றீஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர் குறையும் காலத்தில், பழைய கோயில் உள்ளே உள்ளதைக் காண முடியும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]

தலவரலாறு

[தொகு]

இறைவன், சுந்தரருக்கு ஊன்றுகோல் கொடுத்த தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பழைய கோயில் திருவிளம்புதூரிலுள்ளது. சிவபெருமான் கண்ணொளி தராது ஊன்றுகோல் தந்ததால் கோபமடைந்தார் சுந்தரர். தாம் பெற்ற ஊன்றுகோலைக் கோபத்துடன் இறைவனார் நோக்கி வீசியெறிந்தார். அது நந்தியெம்பெருமான் மீது பட்டு கொம்புடைந்ததால் இத்திருக்கோயில் நந்தி கொம்புடைந்து உள்ளார்.

பழையகோயில் வரலாறு

[தொகு]

தேவார காலத்தில் இருந்த திருவெண்பாக்கம் ஆலயம் சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது நீரில் மூழ்கி விட்டது. இப்போதுள்ள ஆலயம் பூண்டி நீர்த்தேக்கம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு 1968-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன.

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளியிணைப்புகள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]