திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை (ஏப்ரல் 16, 1893 – )தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார்[1]. திருவீழிமிழலை சகோதரர்கள் என சிறப்பாக அழைக்கப்பட்டவர்களில் இவர் மூத்தவர் ஆவார். இளையவர் எஸ். நடராஜ சுந்தரம் பிள்ளை ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சுப்பிரமணிய பிள்ளை திருவீழிமிழலையில் 1893 ஏப்ரல் 16 அன்று சுவாமிநாத பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். இவரது தாய் மாமன் பிரபல நாதசுரக் கலைஞர் நாகூர் சுப்பையா பிள்ளை. இவருடன் கூடப் பிறந்தவர்கள் நடராச சுந்தரம் பிள்ளை, கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோர்.[2]

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கலைஞர் குறித்த குறுந்தகவலும், புகைப்படமும்". தமிழ் இசைச் சங்கம் (சென்னை). Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2014.
  2. பண் ஆராய்ச்சி வெள்ளி விழா சிறப்பு மலர், தமிழிசைச் சங்கம், சென்னை, 1974
  3. சங்கீத கலாநிதி விருது வழங்கப் பெற்றவர்கள்
  4. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018. 
  5. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2014-05-10.