கூவம் திரிபுராந்தகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவிற்கோலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேவாரம் பாடல் பெற்ற
திருவிற்கோலம் திரிபுராந்தகர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கூவரம், திருவிற்கோலம்
பெயர்:திருவிற்கோலம் திரிபுராந்தகர் கோயில்
அமைவிடம்
ஊர்:கூவம்
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திரிபுராந்தகர்,திருவிற்கோலநாதர், திரிபுராந்தகேசுவரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:திரிபுராந்தக நாயகி, திரிபுரசுந்தரி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:அக்னி தீர்த்தம்(கூவாக்கினி-குளம்; தவளைகள் இக்குளத்தில் குடியிருப்பதில்லை என்பது ஐதீகம்)
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞான சம்பந்தர்

கூவம் திரிபுராந்தகர் கோயில் (Tripuranthaka Swamy Temple) என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]

இறைவன், இறைவி[தொகு]

இச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி.

சிறப்பு[தொகு]

திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது.[2] திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

அமைவிடம்[தொகு]

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூவம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 35

வெளி இணைப்புகள்[தொகு]

அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்