திருவிருத்தம் (திருநாவுக்கரசர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவிருத்தம் (திருநாவுகரசர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

திருநாவுகரசர் பாடிய தேவாரப் பாடல்களில் நான்காம் திருமுறையில் சரக்கறை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவபெருமான்மீது பாடிய பாடல்கள் சரக்கறைத் திருவிருத்தம் என்னும் பெயரைத் தாங்கியுள்ளன. யாப்பு நெறியில் கட்டளைக் கலித்துறை எனக் குறிப்பிடப்படும் பாடல்கள் இறைவனைப் பற்றியதாக அமையும்போது திருவிருத்தம் எனச் சிறப்பிக்கப்படுகின்றன.

திருநாவுக்கரசர் பாடிய திருவிருத்தம் - எடுத்துக்காட்டு

திருவிருத்தக் கட்டளைக்கலித்துறை இலக்கண நோக்கில் சீர் பிரிப்பு

விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட்
படையும் படையாய் நிரைத்தபல் பூதமும் பாய்புலித்தோல்
உடையு முடைதலை மாலையும் மாலைப் பிறையொதுங்குஞ்
சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. [1] [2]

மேலே உள்ள பாடல் பொருள் உணரும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது

விடையும் விடைப் பெரும்பாகா என் விண்ணப்பம்; வெம் மழு ஆட்
படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலித் தோல்
உடையும் உடைதலை [3] மாலையும் மாலைப்பிறை [4] ஒதுங்கும்
சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே.

வெளி இணைப்பு[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. நான்காம் திருமுறை தேவாரம் 1039
  2. நிரையசையில் தொடங்கும் இதன் பாடலடிகள் ஒவ்வொன்றிலும் ஒற்று நீக்கிப் பார்க்கும்போது 17 எழுத்துக்கள் மட்டுமே இருக்கும்.
  3. மண்டை ஓடு
  4. மாலையில் தோன்றும் பிறைநிலா