திருவிதாங்கூர் ஆமை


திருவிதாங்கூர் ஆமை (Indotestudo travancorica)[1] 33 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடிய பெரிய, காட்டு ஆமை வகை ஆகும். இது 450-850 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்காடுகளில் வாழ்கிறது.இதன் முக்கிய உணவு புற்களும் செடிகளும். இது மட்டுமன்றி நத்தைகள், பூச்சிகள் போன்றவற்றையும் உண்ணும். மட்டக்குழி தோண்டி அதில் 5 முட்டைகள் வரை இடும்.
- வட்டார வழக்குகள்:
- தமிழ்: கல் ஆமை, பெரிய ஆமை
- கன்னடம்: பெத்த ஆமை, கடு ஆமை
- மலையாளம்: சுர்ரல் ஆமை