திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை
திருவிடைமருதூர் வீருஸ்வாமி பிள்ளை

திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை (Tiruvidaimarudur P. S. Veerusamy Pillai) (நவம்பர் 9, 1896 - ஏப்ரல் 19, 1973)[உ 1] தென்னிந்தியா, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாதசுவர வாத்திய இசைக் கலைஞர் ஆவார்.

நாதசுவர கலைஞராக[தொகு]

திருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளையின் மாணாக்கரான இவர் திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளையுடன் ஜோடியாக நாதசுவரம் வாசிக்கும் வாய்ப்பு பெற்றவர்.[1]

பாரி வகை நாதசுவரத்தைப் பயன்படுத்திய வீருசாமி பிள்ளை, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை எனப் பல நாடுகளிலும் கச்சேரிகள் செய்தார். [2]

அவர் மைசூர், திருவிதாங்கூர், புதுக்கோட்டை ஆகிய சமஸ்தான அரசவைகளில் நாதசுவர கச்சேரிகள் செய்தார்.

அது மட்டுமின்றி தில்லி, ஐதராபாத் ஆகிய நகரங்களிலும், திருப்பதி தேவஸ்தானம், தருமபுர ஆதீனம், மதுரை ஆதீனம் ஆகிய சமய தலங்களிலும் நாதசுவரம் வாசித்தார்.

அகில இந்திய வானொலியின் தில்லி, ஐதராபாத், சென்னை ஆகிய வானொலி நிலையங்களில் முதல் நிலைக் கலைஞராகத் திகழ்ந்தார்.[3]

இசை ஆர்வம் காரணமாக ஜி. என். பாலசுப்பிரமணியம் சகுந்தலை திரைப்படத்தில் காம்போதி ராகத்தின் அனைத்து லட்சணங்களையும் சேர்த்து பாடிய "எனை மறந்தனன்" என்ற விருத்தம் வரும் காட்சியை பல தடவைகள் பார்த்தார். [4]

அந்த ஊருக்கு இசையுலகில் பெரும்பெயரை வாங்கித் தந்த நாகசுரம் வீருசாமி பிள்ளைக்குத் தாளம் போட்ட சி. கணேசன் அவர்கள், வீருசாமி பிள்ளைக்கு 22 ஆண்டுகள் தாளம் போட்டிருக்கிறார். மியூசிக் அகாதெமியின் சங்கீத கலாநிதி பட்டம் பெற்ற மூன்று நாகசுர கலைஞர்களில் வீருசாமிபிள்ளையும் ஒருவர்.

மேலும் கணேசன் அவர்கள் கூறினார்் ,

குடும்ப வறுமையின் காரணமாக தன்னுடைய ஒன்பதாவது வயதில் வீருசாமி பிள்ளையிடம் தாளம் போடுவதற்காக வந்து சேர்ந்தார் கணேசன். அன்றிலிருந்து 22 ஆண்டுகள் அவரோடே இருந்தார். 13 வயதில் வீருசாமி பிள்ளையுடன் இலங்கை செல்வதற்காக அவர் பெற்ற பாஸ்போர்ட்டை எடுத்து நமக்காகக் காட்டினார்.

“நான் போகாத ஊர் இல்லை. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என பல நாடுகளுக்கும் போயிருக்கிறேன். ஒரு மாதம் இரண்டு மாதம் தொடர்ந்து கச்சேரி இருக்கும். வீட்டுக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறைதான் வருவோம். ஒரு தலைமுறைக்கு ஒரு தாளம் (ஜால்ரா) போதுமானது. ஆனால் நான் ஏழு தாளங்களை உடைத்திருக்கிறேன். அப்படினா எவ்வளவு கச்சேரி இருந்திருக்குமுண்ணு யூகிச்சுக்குங்க,” என்று கூறிக் கொண்டே தன் வீட்டு சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த வீருசாமி பிள்ளையின் படத்தை உற்றுப் பார்த்தார் கணேசன்.

கண்ணாடி உடைந்து, சிலந்தி வலை சூழ இருந்த புகைப்படத்தில் கையில் பாரி நாயனத்துடன் கம்பீரமாக நம்மைப் பார்க்கிறார் வீருசாமி பிள்ளை.

“அவர் கணக்கில்லாம சம்பாதிச்சாரு. இந்த ஊருல எட்டுக்கட்டு வீடு அவர் வைத்திருந்தார். ஆனால் அவர் காலத்துக்குப் பிறகு பல கை மாறி விட்டது. கடைசியில் வீட்டை வாங்கியவர்கள் அதை டாஸ்மாக் சாராயக்கடை நடத்துவதற்கு வாடகைக்கு விட்ட போதுதான் என் மனம் உடைஞ்சு போச்சுங்க,” என்று கூறிக் கொண்டே தன்னுடைய இடதுகை பெருவிரலால் படத்தில் இருந்த சிலந்தி வலையைத் துடைத்தார்.

கணேசனுக்கு இடதுகையில் பெருவிரல் மட்டும்தான் இருக்கிறது.

“இந்த ஊரில் ஒரு நாயுடு ரைஸ் மில் வைத்திருந்தார். அரையணாவுக்கு நெல் அரைத்துத் தருவார். கூலி அதிகமாக இருக்கிறது என்று எல்லோரும் வீருசாமி பிள்ளையிடம் கூறினார்கள். நாயுடு அவருக்கு நண்பர். காலணாவுக்கு அரைத்துத் தருமாறு நாயுடுவிடம் கேட்டுக் கொண்டார். நீரு ஒரு மில் வைச்சு காலணாவுக்கு அரைத்துக் கொடும் என்றார் நாயுடு. உடனே மில் வைத்து விட்டார் வீருசாமி பிள்ளை,” என்று பழைய கதையை நினைவுகூர்ந்தார்.

அந்த மில்லின் எந்திரத்தில் கை மாட்டிக் கொண்டுதான் கணேசனின் நான்கு விரல்களும் துண்டாகி விட்டன.

நாதசுவர இசை ஆசிரியராக[தொகு]

சுவாமிமலை, பழனி ஆகிய இடங்களில் அமைந்திருந்த நாதசுவர பயிற்சிப் பள்ளிகளில் முதல்வராகப் பணியாற்றினார்.

வானொலி நிலையங்களில் இசைக் கலைஞர்களைத் தேர்வு செய்யும் முதன்மைத் தேர்வாளராகவும் பணியாற்றினார்.[3]

மாணாக்கர்[தொகு]

இவரது மருகர் வயலின் வித்துவான் மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜ பிள்ளை,[5] இவரது சகோதரரின் மகனும் நாதசுவர வித்துவானுமாகிய இசைப்பேரறிஞர் திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா[6] ஆகியோர் இவரது மாணாக்கராவர்.

விருதுகளும் பாராட்டுகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பி. எம். சுந்தரம் எழுதிய மங்கல இசை மன்னர்கள் என்ற நூல். தகவல்: பரிவாதினி
  1. திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி பிள்ளை[தொடர்பிழந்த இணைப்பு]
  2. கால வெள்ளத்தில் கரைந்து போன கலைஞர்கள்
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 நாகசுர மேதையின் சிலை பொது இடத்தில் வைக்கப்படுமா?
  4. "ஜி. என். பி. நூற்றாண்டு விழா". 2016-06-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-08-10 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Felicity with the fiddle". 2008-02-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-19 அன்று பார்க்கப்பட்டது.
  6. "திருவிடைமருதூர் பி. எஸ். வி. ராஜா". 2013-03-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-19 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Recipients of Sangita Kalanidhi". 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-19 அன்று பார்க்கப்பட்டது.
  8. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 23 டிசம்பர் 2018. 2012-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 டிசம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.