திருவாளியன் சுறா
திருவாளியன் சுறா புதைப்படிவ காலம்: | |
---|---|
A leopard shark and two blacksmith damselfish in the Birch Aquarium | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Triakis |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/TriakisT. semifasciata
|
இருசொற் பெயரீடு | |
Triakis semifasciata Girard, 1855[2] | |
Range of the leopard shark | |
வேறு பெயர்கள் | |
Mustelus felis Ayres, 1854 |
திருவாளியன் சுறா அல்லது சிறுத்தை சுறா (Leopard shark) என்பது டிரையகிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை ஹவுண்ட் சுறா இனமாகும். இது வட அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில், அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்திலிருந்து மெக்சிகோவில் மசாட்லான் வரை காணப்படுகிறது. பொதுவாக 1.2-1.5 மீ (3.9-4.9 அடி) நீளம் கொண்ட, மெல்லிய உடல் கொண்ட இந்த சுறா முதுகில் கருப்பு சேணம் போன்ற பட்டைகளும், உடலில் உள்ள பெரிய புள்ளிகள் கொண்டும் காணப்படுகிறது. இதனால் இது சிறுத்தை சுறா என்ற பொதுப் பெயரைப் பெற்றது. திருவாளியன் சுறாக் கூட்டங்கள் விரிகுடாக்கள் மற்றும் முகத்துவாரங்களில், மணலும் சேறும் சகதியுமாக உள்ள இடங்களிலோ அல்லது கெல்ப் காடுகள் மற்றும் பவளப் படிப்பாறை நிறைந்த பகுதிகளில் நீந்துவது பொதுவான காட்சியாகும். இவை கடற்கரைக்கு அருகில், 4 மீ (13 அடி) ஆழத்திற்கும் குறைவான கடற்பகுதியில் கடற்கரைக்கு அருகில் பொதுவாக காணப்படும்.
சுறுசுறுப்பாக நீந்தி வேட்டையாடுபவையான, சிறுத்தை சுறாக் குழுக்கள் பெரும்பாலும் உணவுக்காக, முக்கியமாக மட்டி, கரண்டி புழுக்கள், நண்டு, இறால், எலும்பு மீன், மீன் முட்டை போன்றவற்றை உணவாக கொள்கின்றன. பெரும்பாலான சிறுத்தை சுறாக்கள் வேறு இடங்களுக்கு நீண்ட பயணத்தை மேற்கொள்வதை விட, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. இது பல்வேறு பகுதிகளில் வாழும் சுறா மீன்களுக்கிடையே மரபணு வேறுபாட்டிற்கு வழிவகுத்தது. இந்த இனம் உள்பொரி முட்டைகளைக் கொண்டது ஆகும். அதாவது கருப்பையின் உள்ளேயே குஞ்சு பொரித்து மஞ்சள் கருவில் உள்ள சத்தானது மீன் குஞ்சுக்கு ஊட்டமாகிறது. ஆண்டின் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலத்தில், பெண் சுறாவானது 10-12 மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு 37 இளம் குட்டிகளைப் பெற்றெடுக்கிறது. இது ஒப்பீட்டளவில் மெதுவாக வளரும் மற்றும் பருவமடைய பல ஆண்டுகள் ஆகும்.
மனிதர்களுக்கு தொந்தரவு தராத, சிறுத்தை சுறாக்களானது உணவு மற்றும் மீன் வணிகத்துக்காக பிடிக்கப்படுகின்றன. இந்த இனங்கள் பெரும்பாலும் கலிபோர்னியா கடற்பகுதியில் பிடிக்கப்படுகின்றன. அங்கு 1980 களில் சுறாக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய பிறகு, 1990 களின் முற்பகுதியில் புதிய மீன்பிடி விதிமுறைகள் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு மீன்பிடித்தல் கட்டுப்பாட்டுத்தப்பட்டது. இந்த சுறாவின் மெதுவான வளர்ச்சி மற்றும் வரையறுக்கப்பட்ட இடங்களுக்குள் வாழும் பழக்கம் போன்றவறின் காரணமாக உள்ளூர் மீனவர்கள் எளிதில் மீன்பிடிக்கலாம் என்று உள்ள நிலையிலும் , இயற்கையை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் இந்த இனத்தை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என மதிப்பிட்டுள்ளது.
குறிப்பு
[தொகு]- ↑ Carlisle, A.; S.E. Smith (2004). "Triakis semifasciata". IUCN Red List of Threatened Species 2004. https://www.iucnredlist.org/details/39363/0. பார்த்த நாள்: January 28, 2010.
- ↑ Girard, C.F. (April 13, 1855). "Characteristics of some cartilaginous fishes of the Pacific coast of North America". Proceedings of the Academy of Natural Sciences of Philadelphia 7: 196–197.