திருவாரூர் திலகம்
பி. ஆர். திலகம் | |
---|---|
பிறப்பு | 1926 திருவாரூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | நாட்டிய நடனம் நிகழ்த்துனர் |
அறியப்படுவது | குறவஞ்சி நாட்டிய நாடகம் |
விருதுகள் | பத்மசிறீ சங்கீத நாடக அகாதமி விருது |
பி. ஆர். திலகம் (P. R. Thilagam) பிரபலமாக திருவாரூர் திலகம் என்றும் அறியப்படும் இவர் ஓர் இந்திய இசையமைப்பாளரும், பாடகருமாவார். மேலும், இவர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் பாரம்பரிய குறவஞ்சி என்ற பிரபலமான நாட்டிய நாடக வடிவத்தின் நிபுணருமாவார். திருவாரூர் தியாகராஜா கோயிலில் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பெண்களின் ஒரு பிரிவான இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கொண்டி பாரம்பரியத்தைச் சேர்ந்தவராவார். [1]
திலகம் 1926 ஆம் ஆண்டில் தியாகராஜர் கோயிலுக்கு பிரபலமான தமிழ்நாட்டிலிலுள்ள திருவாரூரில் பிறந்தார். கொண்டி தேவதாசிகளில் கடைசி ஒருவராக, நடனக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்தார். [2] நடன நாடகத்தின் குறிப்பிடத்தக்க கலைஞராக இருந்த இவரது பாட்டி கமலாம்பாளிடமிருந்து குறவஞ்சியைக் கற்றுக் கொண்டார். [3] பின்னர், இவர் பொது நிகழ்ச்சிகளை நிகழ்த்தத் தொடங்கினார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல கட்டங்களில் குறவஞ்சியை நிகழ்த்தியுள்ளார். [4] இவர் 1997 இசை சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றுள்ளார். [5] [6] கலைத்துறையில் இவர் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு 2007 ஆம் ஆண்டில் இந்திய குடிமகனின் நான்காவது உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது. [7] இவரது நிகழ்ச்சியை இந்திரா காந்தி தேசிய கலை மையம் கானொளிக் காட்சியாக ஆவணப்படுத்தியுள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Before the music stopped". 13 December 2001. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "Padma Shri Awardees for Arts". Kutcheri Buzz. 28 January 2007. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "Major IGNCA Documentation". Indira Gandhi National Centre for the Arts. 2016. Archived from the original on 17 செப்டம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kalakshetra Annual Art Festival" (PDF). Ragashankara. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Overview in Oxford Index". Oxford University Press. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "SNA Awardees". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.