திருவாரூர் உலா
திருவாரூர் உலா என்பது தமிழ்நாட்டில் திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராசப் பெருமானின் சிறப்பைக் கூறும் ஒரு சிற்றிலக்கிய நூலாகும். இது அந்தகக் கவி வீரராகவ முதலியாரால் எழுதப்பட்டது.[1]
நூலின் சிறப்பு
[தொகு]திருவாரூர்ப் பெருமானின் திருவிளையாடல், திருவாரூரின் இயற்கை அழகு, விழாக்கள், மக்களின் வாழ்க்கை முறை என திருவாரூர் வரலாறு பற்றிய செய்திகளை இந்நூல் கூறுகிறது. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் தியாகராசப் பெருமானைக் கண்டு காதல் கொண்டு மயங்கி நிற்கும் சிறப்பினை கலிவெண்பாப் பாட்டினால் எடுத்துரைப்பதாக இந்நூல் அமைகிறது. மடக்கு, சிலேடை ஆகிய சொல்லணிகளும், தொனிப் பொருள்கள் போன்ற சிறப்புக்களும் உடையது.
பத்திரிகை வெளியீடு
[தொகு]தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக வெளிவந்து கொண்டிருந்த செந்தமிழ்ப் பத்திரிகையில் திருவாரூர் உலாவை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியாக வெளிவரச் செய்தார். 1905-ஆம் ஆண்டு நிறைவு பகுதி வெளியானது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.tamilvu.org/ta/courses-degree-p103-p1034-html-p1034311-26198
- ↑ கி. வா., ஜகந்நாதன். தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் (1983 ed.). p. 52.