திருவள்ளூர் புத்தகக் காட்சி
| திருவள்ளூர் புத்தகக் காட்சி | |
|---|---|
| நிகழ்நிலை | செயல்பாட்டில் உள்ளது |
| வகை | புத்தகக் கண்காட்சி |
| அமைவிடம்(கள்) | திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு |
| நாடு | |
| துவக்கம் | 2022 |
| மிக அண்மைய | 2025 |
| அமைப்பாளர் | தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், சென்னை |
திருவள்ளூர் புத்தகக் காட்சி என்பது, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட 'தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்' என்ற அமைப்பால் ஆண்டுதோறும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியாகும்.
முதல் கண்காட்சி
[தொகு]2022-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் ஒன்றாம் திகதி முதல் ஏப்பிரல் பதினோராம் திகதி வரை, திருவள்ளூர் மாவட்டத்தில் 'தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்' சார்பில் ஆரம்பிக்கப்பட்ட முதல் புத்தகக் கண்காட்சியானது, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது. 105 அரங்குகளில், இலட்சக்கணக்கான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.[1][2]
இரண்டாம் கண்காட்சி
[தொகு]2023-ஆம் வருடம் புத்தகக் காட்சி, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆவடி எச். வி. எஃப். மைதானத்தில், மார்ச்சு 17 முதல் மார்ச்சு 27 வரை நடைபெற்றது. 100 அரங்குகள், 10,000 தலைப்புகள் கொண்டு, இலட்சக்கணக்கான புத்தகங்கள், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.[3]
மூன்றாம் கண்காட்சி
[தொகு]2024-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சி, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெப்பிரவரி 24 முதல் மார்ச்சு 4 வரை மக்கள் பயன்பாட்டில் இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தலைப்புகளில் இலட்சக்கணக்கான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.[4][5]
நான்காம் கண்காட்சி
[தொகு]2025-ஆம் வருடத்திய புத்தகக் கண்காட்சியின் நான்காவது ஆண்டின் நிகழ்வு, மார்ச்சு மாதம் 7-ஆம் திகதி முதல் 17-ஆம் திகதி வரை நடைபெறுகிறது. 125 அரங்குகளில், பல்லாயிரக்கணக்கான தலைப்புகளில், இலட்சக்கணக்கான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "360: திருவள்ளூரில் முதல் புத்தகத் திருவிழா" (in ta). 2022-04-02. https://www.hindutamil.in/news/literature/784160-360-events.html.
- ↑ Special Correspondent (2022-03-16). "Book fair to be held in Tiruvallur" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/chennai/book-fair-to-be-held-in-tiruvallur/article65230435.ece.
- ↑ தினத்தந்தி (2023-03-13). "ஆவடியில் மார்ச் 17-ல் புத்தகக் காட்சி தொடக்கம்" (in ta). https://www.dailythanthi.com/News/State/book-fair-starts-on-march-17-in-avadi-918346.
- ↑ தினமலர். "திருவள்ளூரில் 24ல் புத்தக கண்காட்சி" (in ta). https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-thiruvallur/book-fair-at-tiruvallur-on-24th/3557256.
- ↑ மாலை மலர் (2024-02-24). "திருவள்ளூரில் புத்தக கண்காட்சி தொடங்கியது" (in ta). https://www.maalaimalar.com/news/district/tamil-news-the-book-fair-has-started-704780.
- ↑ தினமலர். "திருவள்ளூரில் புத்தக திருவிழா 'லோகோ' வெளியீடு" (in ta). https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-thiruvallur/book-festival-logo-launched-in-thiruvallur--/3865730.
- ↑ Din (2025-03-06). "திருவள்ளூரில் இன்று 4-ஆவது புத்தகத் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைக்கின்றனா்" (in ta). https://www.dinamani.com/thiruvallur/2025/Mar/06/4th-book-festival-in-thiruvallur-today-ministers-inaugurate.