திருவரங்கம் திருமணக்கூட தீவிபத்து

ஆள்கூறுகள்: 10°51′18″N 78°41′29″E / 10.85500°N 78.69139°E / 10.85500; 78.69139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவரங்கம் திருமணக்கூட தீவிபத்து
நாள்சனவரி 23, 2004 (2004-01-23)[1]
நிகழிடம்திருவரங்கம், தமிழ்நாடு
Coordinates10°51′18″N 78°41′29″E / 10.85500°N 78.69139°E / 10.85500; 78.69139
காயப்பட்டோர்50
உயிரிழப்பு57

திருவரங்கம் திருமணக்கூட தீவிபத்துSrirangam marriage hall fire) என்பது தமிழ்நாட்டின் திருவரங்கத்தில் உள்ள பத்மபிரியா திருமண மண்டபத்தில் 2004 சனவரி 23 அன்று நேர்ந்த தீவிபத்தைக் குறிப்பதாகும். இந்த நேர்ச்சியில்   மாப்பிள்ளை உட்பட 57 பேர் உயிரிழந்தனர், மேலும் 50 பேர் காயமடைந்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம், காணொளி படப்பிடிப்புக் கருவியை இணைக்கும் மின் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவே என்று கண்டுபிடிக்கப்பட்டது, மின் கசிவினால் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலை பந்தலில் தீப்பற்றியதால் இது ஏற்பட்டது.

இந்த நேர்சியானது மாநிலத்தில் நடந்த நான்கு மிகப்பெரிய தீவிபத்துக்களில் ஒன்றாகும், பிற விபத்துகள் 2001 ஆகத்து 6 இல் ஏர்வாடியில் நடந்த விபத்தில் 30 மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள் இறந்தனர். அடுத்து 1997 சூன் 7 அன்று தஞ்சை பெரிய கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து அதில் 48 பேர் இறந்தனர். அடுத்து  கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து இதில் 94 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர். திருவரங்க தீவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 50,000, கடுமையான காயமுற்றவர்களுக்கு 15,000, லேசான காயமடைந்தவர்களுக்கு 6,000 ரூபாய் நிவாரண நிதியாக முன்னால் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அறிவித்தார்.

இந்த வழக்கானது திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. 2012 சூன்  14  அன்று, நீதிபதி ராமசாமி (65), திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு, இரண்டு ஆண்டு கடுஞ் சிறைத்தண்டனை மற்றும்  விபத்தில் இறந்தவர்கள் ஓவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா 50,000 ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் இழப்பீடாக அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில்  கூரை ஒப்பந்ததாரரான செல்வம் தீர்ப்புக்கு முன்பே இறந்துவிட்டார். கானொளி படப்பிடிப்பாளரான தர்மராஜிக்கு ஓராண்டு சிறையும், மண்டப மேலாளரான சடகோபனுக்கு ஓராண்டு தண்டனையும், மின்பணியாளர் முருகேசனுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.

நேர்ச்சி[தொகு]

2004 சனவரி 23 வெள்ளிக்கிழமை அன்று இந்து சம்பிரதாயப்படி திருமணத்திற்காக குறிப்பிடப்பட்ட நாளாகும். அந்த நாளில் திருவரங்கத்தின், ஈவி சீனிவாச்சாரி சாலையில் உள்ள பத்மபிரியா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகன், குருராஜன் (40), ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் பணியாளர் மற்றும் மணமகள் ஜெயஸ்ரீ ராமநாதன், ஒரு பள்ளி ஆசிரியர். கூட்டம் பெரியதாக இருந்ததால், திருமண நிகழ்வானது மண்டபத்தின் முதல் நிலையில் உள்ள திறந்தவெளிப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு ஓலைப் பந்தலுக்கு மாற்றப்பட்டது .[2]  காலை 9:15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது,  தற்காலிக ஓலைக் கூரை, நெகிழி நாற்காலிகள் மற்றும் ஆடை பொருட்கள் போன்றவற்றால் விரைவில் பரவிய தீயால் நிகழ்விடத்திலேயே 30 பேர் இறந்தனர். ஓலைக் கூரையானது பார்வையாளர்கள் மீது வீழ்ந்தது, மண்டபத்தை சூழ்ந்த புகையால், வெளியேறும் பாதைகள் மூடி மறைக்கப்பட்டு புலப்படாமல் செய்தது. தீயில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தவர்கள் நெரிசலில் சிக்கி ஒருவர்மீது ஒருவர் விழுந்ததாகக் கூறப்படுகிறது. திருவரங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளியிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். காயமடைந்தவர்கள் திருவரங்கம் அரசு மருத்துவமனை மற்றும் திருச்சிராப்பள்ளியில் உள்ள கே. ஏ. பி. விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மொத்தம் 57 பேர் இறந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர். தீவிபத்துக்கு காரணமாக கண்ணால் கண்ட சாட்சியத்தின் அடிப்படையில் காணொளி படப்பதிவுக் கருவிக்கு வந்த மின்சாரக் கம்பியில் ஏற்பட்ட மின் கசிவில் வெளிபட்ட தீயானது முதல் தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓலைப் பந்தல் கூரையின்மீது பட்டு தீ பரவியதே இந்த தீவிபத்துக்குக் காரணமாக கூறப்பட்டது. இந்த தீவிபத்தில் மணமகன் குருராஜன் (40), 20 பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகள், இவர்களில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளகள் போன்றோர் இறந்தனர். மணமகன் ஜெயஸ்ரீ (32) பலத்த தீக்காயமுற்றார். நேர்ச்சிக்குப் பிறகு, நிகழ்விடத்தில்  சடலங்கள், பாத்திரங்கள் மற்றும் உடைகள் போன்றவை எல்லா இடங்களிலும் பரவிக் கிடந்தன. மீட்பு நடவடிக்கையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர், கே. மணிவசான், காவல்துறைத் தலைமை இயக்குனர் எஸ். ஜார்ஜ், காவல்துறைத் துணைத்தலைவர் மற்றும் நகர காவல் ஆணையர் சுனில் குமார் சிங் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.[3] நிகழ்விடத்தியே பலியானவர்களில் பலர் மணமகனின் சக ஊழியர்கள் ஆவர்.

விசாரணை[தொகு]

காவல் துறையினர் விசாரணையின் துவக்கத்தில் காணொளி பதிவாளரின் உபகரணத்தை இணைக்கும் மின் இணைப்பில் ஏற்பட்ட கசிவினால் தீ ஏற்பட சாத்தியம் இருப்பதாகக் கண்டறிந்தனர். காவல்துறைத் தலைமை இயக்குனர் எஸ். ஜார்ஜ் ஊடகத்திடம் தெரிவித்ததாவது, குறைந்த உயரத்தில் ஓலைப் பந்தலில் தொங்கிய அலங்காரப் பொருட்கள் அநேகமாக காணொளி படப்பிடிப்பின் போதுவெளிப்படுத்தப்பட்ட ஒளிப்பாய்ச்சி மூலம் உருவான கடுமையான வெப்பத்தால் சூடானது ஒரு காரணமாக இருக்கலாம் என்றார். மேலும் அவர் கூறுகையில் தற்காலிக ஓலைக் கூரையில் அமைக்கப்பட்ட மின் கம்பிகளில் ஏற்பட்ட மின் கசிவினால் ஏற்பட்ட தீயும் இதனுடன் சேர தீ மிக வேகமாக பரவியது முதன்மைக் காரணங்களாக இருந்தன என்று அவர் சுட்டிக்காட்டினார். திருமணத்தை பதிவுசெய்த காணொளி கருவியில் இருந்த காணொளிப் பெட்டகத்தை காவல்துறையினர் மீட்டனர். இந்த நிகழ்வு சம்பந்தமாக திருமண மண்டப மேலாளர் எஸ். சடகோபன், காணொளி ஒளிபாய்ச்சுநரான ஆர். பாலாஜி, மின்பணியாளர் கே. முருகேசன் மற்றும் பந்தல் ஒப்பந்தக்காரர் எம். செல்வம் ஆகிய நான்குபேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது  இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 304ஏ வில் அலட்சியமாக இருந்து உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர் தகுதி நிலைக்கொண்ட அதிகாரியின் தலைமையில் நடந்தது.[4] இந்த ஆய்வில் திருமண மண்டபத்தின் மாடிக்கு செல்ல 2.5 அடி (0.76 மீ)  குறுகிய படிக்கட்டு ஒன்று மட்டுமே போய்வர இருந்தது அறியப்பட்டது.[5] இந்த வழக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. 14 சூன் 2012 அன்று, நீதிபதி ராமசாமி (65), திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு இரண்டு ஆண்டுகள் கடுஞ்சிறைத் தண்டனையை விதித்தார். மற்றும் விபத்தில் இறந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா 50,000 ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் இழப்பீடாக அளிக்கவேண்டும் என உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் கூரை ஒப்பந்ததாரரான செல்வம் தீர்ப்புக்கு முன்பே இறந்துவிட்டார். காணொளி படப்பிடிப்பாளரான தர்மராஜிக்கு ஓராண்டு சிறையும், மண்டப மேலாளரான சடகோபனுக்கு ஓராண்டு தண்டனையும், மின்பணியாளர் முருகேசனுக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.[6]

பின்விளைவு[தொகு]

தீவிபத்தில் இறந்த 42 பேர்களுக்கான ஈமச் சடங்குகள் 2004 சனவரி 24 ஆம் தேதி காவிரி ஆற்றங்கரையில் நடந்தது. இதில் பதினான்கு குடும்பங்கள் கலந்து கொண்டன. இந்நிகழ்வினால் மணமகள் ஜெயஸ்ரீ மன அழுத்தத்தத்துக்கு ஆளாயினார்.[7]

குறிப்புகள்[தொகு]

  1. "Chronology of major fire accidents". Hindustan Times (New Delhi, India). 9 December 2011 இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140610085953/http://www.highbeam.com/doc/1P3-2531606241.html. பார்த்த நாள்: 30 November 2013. (subscription required)
  2. K.N., Arun (24 January 2004). "India Wedding Hall Fire Kills 45 People". AP Online (Madras, India) இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140610090013/http://www.highbeam.com/doc/1P1-89766800.html. (subscription required)(subscription required)
  3. S., Ganesan (24 June 2004). "49 perish in fire at wedding in Srirangam". The Hindu இம் மூலத்தில் இருந்து 30 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040130210539/http://www.hindu.com/2004/01/24/stories/2004012409070100.htm. பார்த்த நாள்: 30 November 2013. 
  4. S., Ganesan (January 31 – February 13, 2004). "Fire at a wedding". Frontline (Tiruchi) 21 (3). http://www.frontline.in/static/html/fl2103/stories/20040213007513400.htm. பார்த்த நாள்: 30 November 2013. 
  5. Chaturvedi, p. 448
  6. "TN: Killer marriage hall owner gets 2-year RI". The New Indian Express (Trichy). 14 June 2012. http://www.newindianexpress.com/states/tamil_nadu/article542282.ece. பார்த்த நாள்: 30 November 2013. 
  7. "42 funerals follow Friday's wedding hall fire". PTI (Rediff). 24 January 2004. http://www.rediff.com/news/2004/jan/24fire.htm. பார்த்த நாள்: 30 November 2013.