திருவம்பாடி கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவம்பாடி கடற்கரை (Thiruvambady Beach) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில், அரபிக் கடலோரத்தில், உள்ள ஒரு கடற்கரையாகும். இந்தக் கட்கரை ஒரு கருப்புக் கடற்கரையாகும். இதற்கு காரணம் கடற்கரை மணலின் நிறம் வழக்கத்திற்கு மாறாக கருப்பு நித்தில் இருப்பதாகும். சந்தடியற்ற அமைதியையும், கடல் காற்றையும் விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாக இது உள்ளது. புறக்குன்றை ஏறிக் கடந்தும் இங்கு போகலாம், அல்லது திருவம்பாடி சாலையில் இருந்து இறக்கைப் பாதையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு சவாரி செய்தும் இக்கடற்கரையை அடையலாம்.

அருகிலுள்ள தொடருந்து நிலையம் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள வர்கலா தொடருந்து நிலையம். அருகிலுள்ள வானூர்தி நிலையம் சுமார் 40 கி.மீ. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவம்பாடி_கடற்கரை&oldid=3027712" இலிருந்து மீள்விக்கப்பட்டது