திருவனந்தபுரம் வானியல் ஆய்வகம்

ஆள்கூறுகள்: 8°30′31″N 76°57′30″E / 8.508497°N 76.958318°E / 8.508497; 76.958318
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1837 இல் வானியல் ஆய்வகக் கட்டிடம்

திருவனந்தபுரம் வான் ஆய்வகம் அல்லது திருவனந்தபுரம் வானியல் ஆய்வகம் என்பது ஒரு அறிவியல் மற்றும் நோக்காய்வகமாகும், இது திருவாங்கூர் மன்னர் சுவாதித் திருநாள் ராம வர்மாவால் 1836-37 இல் நிறுவப்பட்டது. அரசர் பிரித்தானிய வதிவாளர் கர்னல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் ஃப்ரேசருக்கு ஒரு தொழில்முறைஞர் அல்லாத ஒரு வானியல் ஆய்வகத்தை நிறுவ முன்மொழிந்தார். இதற்கு முன்பு ஆலப்புழாவில் தனிபட்டமுறையில் ஒரு சிறிய ஆய்வகத்தை நடத்திவந்த ஜான் கால்டெகாட் அரச வானியலாளராக நியமிக்கப்பட்டார். இந்த ஆய்வகம் நகரத்தின் மிக உயரமான இடத்திலும் அரண்மனைக்கு எதிரேயும் அமைந்திருந்தது, அந்த நேரத்தில் காந்த மையக்கோடு திருவனந்தபுரம் வழியாக சென்றதால் இது முக்கியமானதாக கருதப்பட்டது. இந்த ஆய்வகத்தை மதராஸ் பொறியாளர்களின் லெப்டினன்ட் டபிள்யூ.எச். ஹார்ஸ்லி வடிவமைத்தார். [1] [2]

கால்ட்காட் 1837 சூலை முதல் வானிலை ஆய்வுகளை செய்யத் தொடங்கினார், மேலும் 1842 ஆம் ஆண்டில் ஒரு டாலண்ட் பூமத்திய ரேகை வட்டத்திலிருந்த மற்றொரு கட்டிடத்திற்கு விரிவுபடுத்தினார். திருவிதாங்கூர் பஞ்சாங்கம் 1838 இல் வெளியிடப்பட்டது. கூடுதல் கருவிகளைப் பெறுவதற்காக 1839 ஆம் ஆண்டில் கால்டெகோட் ஐரோப்பாவுக்குச் சென்றார், இந்த காலகட்டத்தில் ஸ்பெர்ஷ்நைடர் தலைமையில் இந்த வானியல் ஆய்வு செயல்பட்டது. கால்டெகோட் 1849 இல் இறந்தார், ஜனவரி 1852 முதல் ஜான் ஆலன் ப்ரவுன் ஆய்வகத்துக்குத் தலைமை தாங்கினார். [3] பிரவுன் மற்றும் அவரது உதவியாளர்களான ஜே. கொச்சுகுஞ்சு மற்றும் ஈ. கொச்சிராவி (கோச்செராவி) பிள்ளை மற்றும் பல "கணிப்பான்கள்" 1874 இல் திருவனந்தபுரம் காந்த வானியல் ஆய்வுகளை வெளியிட உதவினர். [2]

இந்த ஆய்வகம் இப்போது பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. Caldecott, John (1837). "Description of an observatory lately established at Trevandrum, by his Highness the Rajah of Travancore". Madras Journal of Literature and Science 6: 56–60. https://biodiversitylibrary.org/page/46507274. 
  2. 2.0 2.1 Ratcliff, Jessica (2016). "Travancore's magnetic crusade: Geomagnetism and the geography of scientific production in a princely state". The British Journal for the History of Science 49 (3): 325. doi:10.1017/S0007087416000340. 
  3. Stewart, B (1875). "Observations of Magnetic Declination made at Trevandrum and Agustia Malley in the Observatories of his Highness the Maharajah of Travancore, G.C.S.I., in the Years 1852 to 1869". Nature 12 (296): 163. doi:10.1038/012163a0. Bibcode: 1875Natur..12..163S. https://zenodo.org/record/1429217/files/article.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]