திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் என்பது கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்பட்டும் வரும் தமிழ் மொழி வளர்ச்சிக்கான பதிவு பெற்ற ஒரு தமிழ் அமைப்பாகும். 1963 ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்ற இந்த அமைப்பிற்கு திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஒரு சொந்தக் கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் வழியாக, 1978 ஆம் ஆண்டு முதல் ‘கேரளத் தமிழ்’ எனும் மாத இதழ் ஒன்று தொடர்ந்து வெளியிடப்பெற்று வருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வல்லிக்கண்ணன் (2004). தமிழில் சிறு பத்திரிகைகள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம். பக். 274.