திருவண்ணாமலை பெரிய தேர் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவண்ணாமலை பெரிய தேர் திருவிழா

        திருவண்ணமலையில்நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது.அத்திருவிழா 17 நாட்கள் நடைபெறும்.அதில் ஏழாவது நாள் திருவிழா பெரிய தேர் திருவிழா ஆகும்.

பெரிய தேர்[தொகு]

      பெரிய தேர் "மரத் தேர்"என்றும், "மகாரதம்"என்றும் அழைக்கப்படுகிறது.நாட்டுகோட்டை நகரத்தார் என்ற வாணிப மக்கள்  திருவண்ணாமலை கோயில் தேர் திருப்பணிக்கும், அலங்கார நகைகளுக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளனர்.மகாரதம் என்ற இந்த சாமித்தேர் 1853-ல் புதிதாக செய்யப்பட்டு அதே ஆண்டு கார்த்திகை திங்களில் 5 ம் நாள் வெள்ளோட்டம் விடப்பட்டது.இது 1926 எரிந்து போனது பின்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

பெரிய தேர் திருவிழா[தொகு]

      கார்த்திகை தீபத் திருவிழாவில் இது  ஏழாவது நாள் திருவிழாகும்.இத்தேர்த்திருவிழா பிரமாண்டமாக நடைபெறும்.இதை காண லட்சகணக்கான மக்கள் வருவர். தேர் வடம் பிடித்து இழுப்பர்.காலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி மகாரதங்களில் எழுந்தருள்வார்.தேர் ஓடும் போது சங்கிலி பிடித்து திரும்ப வசதியாக ஒவ்வொரு வீதி முனையிலும் ஒரு சந்து விடப்பட்டே இந்த நகரம் அமைந்துள்ளது.
         தேரோட்டத்தின் போது தேருக்கு முட்டுக்கட்டை போடுவோர் 'கம்மாள' இனத்தவர் ஆவார்.அதே போன்று தேரின் பின்னாளில்லிருந்து சன்ன கட்டை போடுவோர் 'போயர்' இனத்தவர் ஆவார்.

தேர் புறப்பாடு[தொகு]

       அண்ணாமலையார் தேர் புறப்பாடு ஏற்படுவதற்கு முன்பு தேரடி வீதியில் உள்ள முனிஸ்வரனுக்கு சிறப்பு வழிபாடு,தேர்காலில் தேங்காய் உடைத்தல்,பூசணிக்காய்,எலுமிச்சை பலியிடுதல் நடைபெறும்.பின்பு தேர் புறப்படும்.இத்தேர் இழுக்கும் நிகழ்வில் வெளியூர் மக்கள்,வேண்டுதல் உடையோர் போன்ற மக்கள் தேர் இழுப்பர்.

கரும்பில் தூளிகட்டுதல்[தொகு]

       குழந்தை பேறுபெறாத தம்பதிகள் குழந்தை பேரு வேண்டி வேண்டிகொள்வர்.குழந்தை பேறுபெற்றவர்கள் பிறந்த குழந்தையை தூளியில் இட்டு கரும்பில் கட்டி கணவன்,மனைவியும் மாடவீதி வலம் வந்து வேண்டுதலை அன்று நிறைவேற்றுவர்.
           புதிதாக மணமான ஆண்,பெண்,கர்பிணிப்பெண் போன்றோரை தேர் திருவிழா பார்க்க அனுமதிக்க மாட்டார்கள்.தத்தம் வீட்டின் முன்பு  அதிக நேரம் நிற்க கூடாது என்று வேண்டிகொள்வர்.அது கேட்ட சகுனம் ஆகும்.

பார்வை நூல்கள்[தொகு]

   1.ஜனகன்,தீபத் திருத்தலம் திருவண்ணாமலை,கங்கை புத்தக நிலையம்,சென்னை -17
   2.சொமாலே,கும்பாபிஷேக மலர் -2002 கும்பாபிஷேக மலர் குழு,சென்னை -6