திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா

      இந்தியாவில் உள்ள சிவத்தலங்களில் சிறப்பு தலமாக திருவண்ணமலை திருத்தலம் அமைந்துள்ளது.மேலும் இதனை சைவத்தின் தலைநகரம் என்றும் போற்றுகின்றனர்.இத்திருத்தலம் மலையின் பெயரால் திருநாமம் கொண்டு திரு அண்ணாமலை என்று அழைக்கப்படுகிறது.இது தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.இத்திருத்தலத்தில் பல திருவிழாக்கள் நடைபெறுகிறது.அதில் மிகவும் பழமையானதும்,தொன்மையானதும் கார்த்திகை தீபத் திருவிழாவாகும்.

கார்த்திகை தீபத்தின் பழமை[தொகு]

    தீபத் திருவிழா சங்ககாலம் தொட்டே கொண்டாடப்படுகிறது.இதற்கு சான்றாக சங்ககால நூல்கள் மற்றும் கல்வெட்டு சான்றுகள் உள்ளன.நற்றிணை,அகநானூறு, கார்நாற்பது,களவழி நாற்பதிலும் கார்த்திகை தீபம் பற்றி கூறப்பட்டுள்ளது.

சீவகசிந்தாமணி

    கார்த்திகை விளக்கிட்டன கடிகமிழ்
     குவளை பைந்தார் என்று தீபத்திருநாள் சிறப்பிக்கபடுகிறது.

கல்வெட்டுசான்றுகள்:

         கல்வெட்டு எண் 68 ல்கி பி 1037 ல்திருவண்ணமலையில் முதலாம் ராஜேந்திரன் சோழர் ஆட்சியில் கார்த்திகை திங்களில் தீபத்திருவிழா சிறப்பாகா நடைபெற்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழா தோன்றிய கதை[தொகு]

        ஒரு நாள் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே இவ்வுலகில் யார் பெரியவர் என்று போட்டிவந்தபோது அவர்களிடையே சிவன் என்னுடைய அடி(பாதம்)மற்றும் முடியை(தலை)முதலில் யார் காண்கிறார்களோ அவர்களே பெரியவர் என கூறி நெருப்பு பிழம்பாக நின்றார்.ஆனால் பன்றி வடிவமாக அடியை காண சென்ற விஷ்ணுவும்,முடியை காண அன்னமாக உருவெடுத்த பிரம்மாவும் அடியையும் ,முடியையும் காணமுடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.அப்பொழுது சிவன் அவர்களுக்கு நெருப்பு மலையாக காட்சி தந்தது இத்தலம்தான்.அதன் நினைவாக இங்கு தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.எனவே இத்தலம் "தீபத் திருத்தலம்" எனப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழா[தொகு]

    இத்திருக்கோயிலில் மாதம்தோறும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.அதில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும்.கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று சந்திரன் கிருத்திகை நட்சதிரத்த்லிருக்கும்போது கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது இத்திருவிழா 17 நாட்கள் நடைபெறும். இத்திருவிழா 3 நாட்கள் துர்கையம்மன் கோயிலிலும்,10 நாட்கள் அண்ணாமலையார் ஆலயத்திலும்,4 நாட்கள் தெப்பத்திருவிழாகும்.

துர்கையம்மன் கோயில் திருவிழாக்கள்[தொகு]

 • முதல் நாள்: இத்திருவிழா"துர்காம்பாள் உற்சவம்"எண்று கூறுவர்.இன்று இரவு துர்கையம்மன் விமானத்தில் வீதி உலா வருவார்.
 • இரண்டாம் நாள்:பிடாரி திருவிழா என்பர்.பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வருவார்.
 • மூன்றாம் நாள்: "விக்னேஷ்வர பூஜை"என்பர்.விக்னேஸ்வரர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா வருவார்.

கார்த்திகை தீபத் திருவிழா துவக்கம்[தொகு]

 • முதல் நாள் :காலை கொடியேற்றம்.பஞ்ச மூர்த்திகள் வெள்ளிவிமானத்தில் புறப்பாடு.
 • இரண்டாம் நாள்: காலையில்விநாயகர்,சந்திரசேகர் சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா வருவார்கள்.
 • மூன்றாம் நாள்: காலையில் விநாயகர்,சந்திரசேகர் பூதவாகனத்திலும்,மாலை .பஞ்ச மூர்த்திகள் வெள்ளிவிமானத்தில் புறப்பாடு.
 • நான்காம் நாள்: காலையில் விநாயகர்,சந்திரசேகர் நாகவாகனத்திலும்,இரவு வெள்ளி மூஷிகம்,மயில்,காமதேனு,கற்பகவிருட்சம்,ரிஷப வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் திரு வீதி உலா வருவர்.
 • ஐந்தாம் நாள்: காலையில் விநாயகர்,சந்திரசேகர் மூஷிகம், கண்ணாடி ரிஷப வாகனத்திலும்,இரவு பஞ்சமூர்த்திகள் திரு வீதி உலா வருவர்.
 • ஆறாம் நாள்: வெள்ளித் தேர் திருவிழா என்பர். காலையில் 63 நாயன்மார்களும் மாடவீதி உலா வருவார்கள்.இரவு பஞ்சமூர்த்திகள் திரு வீதி உலா வருவர்.
 • ஏழாம் நாள்: பெரிய தேர் திருவிழா என்பர். பஞ்சமூர்த்திகளின் திருத்தேர் விருச்சக லக்கனத்தில் தேர் வடம் பிடித்து இழுப்பார்கள்.
 • எட்டாம் நாள்: பிச்சாண்டவர் உற்சவம் என்பர். இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் வருவர்.
 • ஒன்பதாம் நாள்: சுவாமி புருஷமிருக வாகனத்தில் உலா வருவார்.இரவு பஞ்சமூர்த்திகள் கைலாய,காமதேனு வாகனங்களில் வீதி உலா வருவர்.
 • பத்தாம் நாள்: காலை 4 மணிக்கு பரணி தீபம்.பகல் 12 மணிக்கு பிரம்ம தீர்த்ததில் தீர்த்தவாரி.மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் தங்க விமானங்களில் எழுந்தருளுதல் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் வருகையை தொடர்ந்து மகா தீபம் ஏற்றுதல்.

தெப்பத்திருவிழா[தொகு]

 • பதினோராம் நாள்:இரவு சந்திரசேகரர் தெப்பத்தில் வருதல்.
 • பன்னிரண்டாம் நாள்:பராசக்தி தெப்பத்தில் வருதல்.
 • பதின்மூன்றாம் நாள்:சுப்பிரமணியர் தெப்பத்தில் வருதல்.
 • பதினான்காம் நாள்:சண்டிகேஸ்வரர் விழா
           என்று 17 நாட்கள் இத்திருவிழா நடைபெற்று வருகிறது.
 

பார்வை நூல்கள்[தொகு]

  1.பாண்டு ரங்கனார்,அருள் நிறை அண்ணாமலை ,அருண்மொழி பதிப்பகம்,திருவண்ணாமலை,1986
  2.தீபத் திருத்தலம் திருவண்ணாமலை,ஜனகன்,கங்கை புத்தக நிலையம்,சென்னை-17