திருமூர்த்தி அருவி
Appearance
திருமூர்த்தி அருவி இது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்துள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலம் ஆகும்.[1]
அமணலிங்கேஸ்வரர் கோயில்
[தொகு]பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் இது தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.[2]
பஞ்சலிங்கம்
[தொகு]மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள மூலிகை குணமுள்ள பஞ்சலிங்கம் அருவி மிக பிரபலமானது.
திருமூர்த்தி அணை
[தொகு]இந்த அருவியில் இருந்து வரும் நீரானது திருமூர்த்தி அணையில் தேக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படுகிறது.