திருமால்பூர் மணிகண்டீசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருமால்பூர் மணிகண்டீசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | ஹரிசக்கரபும், திருமாற்பேறு. |
பெயர்: | திருமால்பூர் மணிகண்டீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருமால்பூர் |
மாவட்டம்: | வேலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மணிகண்டீஸ்வரர் |
தாயார்: | அஞ்சனாட்சி |
தல விருட்சம்: | வில்வம் |
தீர்த்தம்: | சக்கர தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் |
மணிகண்டீசுவரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]
இறைவன், இறைவி
[தொகு]இத்தலத்தின் மூலவர் மணிகண்டீஸ்வரர், தாயார் அஞ்சனாட்சி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சக்கர தீர்த்தமும் அமைந்துள்ளன.
அமைவிடம்
[தொகு]இத்தலம் தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் திருமால்பூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் பழங்காலத்தில் ஹரிசக்கரபும், திருமாற்பேறு என்ற பெயர்களால் அறியப்பட்டுள்ளது. மேலும் இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் பதினொறாவது தலமாகும்.
தல வரலாறு
[தொகு]ஜலந்திரன் எனும் அரக்கனை கொல்ல சிவபெருமான் சக்ராயுதம் ஒன்றை உருவாக்கியிருந்தார். ததிசி முனிவரை கொல்ல திருமால் ஏவிய சக்ராயுதம், முனிவரின் தெய்வீக தன்மையால் செயலிழந்து போனது. அதனால் சிவபெருமானிடம் சக்ராயுதம் பெறுவதற்காக திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் பூசை செய்துவந்தார்.
ஒரு நாள் ஆயிரம் தாமரைகளில் ஒன்று சிவபெருமானின் அருளால் மறைந்தது. தனது பூசையை நிறைவு செய்வதற்காக திருமால் தனது கண்களில் ஒன்றை தாமரையாக மாற்றி பூசித்தார். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் திருமாலிற்கு பார்வை வழங்கியதுடன், சக்ராயுதத்தினையும் அளித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
வெளி இணைப்புக்கள்
[தொகு]- அருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் தினமலர் கோயில்கள்
- திருமாற்பேறு கோயில்பற்றிய விபரங்கள்[தொடர்பிழந்த இணைப்பு]
இவற்றையும் பார்க்க
[தொகு]திருமாற்பேறு | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருவல்லம் |
தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம் | அடுத்த திருத்தலம் திருஊறல் |
|
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் திருத்தல எண்: 11 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 243 |