திருமலை விரைவுவண்டி
திருமலை விரைவுவண்டி | |||
---|---|---|---|
விசாகப்பட்டினம் தொடருந்து நிலையத்தில் திருப்பதிக்குச் செல்லும் திருமலை விரைவுவண்டி -17488 | |||
கண்ணோட்டம் | |||
வகை | நகரிடைத் தொடருந்து (இண்டர்சிட்டி) | ||
நிகழ்நிலை | இயக்கந்த்தில் | ||
நிகழ்வு இயலிடம் | ஆந்திரப் பிரதேசம் | ||
நடத்துனர்(கள்) | தெற்கு மத்திய ரயில்வே, இந்திய ரயில்வே | ||
வழி | |||
தொடக்கம் | திருப்பதி சந்திப்பு | ||
இடைநிறுத்தங்கள் | 34 | ||
முடிவு | விசாகப்பட்டினம் | ||
ஓடும் தூரம் | 736 km (457 mi) | ||
சராசரி பயண நேரம் | 14 மணி, 05 நிமிடம் | ||
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் | ||
பயணச் சேவைகள் | |||
வகுப்பு(கள்) | படுக்கை வசதி, குளிரூட்ட சாதன வசதி கொண்ட பெட்டிகள், முன்பதிவற்ற பெட்டிகள் | ||
இருக்கை வசதி | வழமையான இந்திய தொடருந்து சேவையின் இருக்கை | ||
உணவு வசதிகள் | கட்டண உணவுச் சேவை | ||
காணும் வசதிகள் | அனைத்துப் பெட்டிகளிலும் பெரிய சாளரங்கள் | ||
சுமைதாங்கி வசதிகள் | இருக்கைகளுக்கு அடியில் | ||
தொழில்நுட்பத் தரவுகள் | |||
சுழலிருப்பு | இரண்டு | ||
பாதை | அகலப்பாதை | ||
வேகம் | 52 கிமீ/மணி | ||
|
திருமலை விரைவுவண்டி (Tirumala Express)[1] விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதி வரை செல்லும் முக்கியமான ரயில் ஆகும். இது 31 ரயில் நிலையங்களில் நிறுத்தங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில நிறுத்தங்கள் பின்வருமாறு: நெல்லூர், ஒங்கோலு, தெனாலி, விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, சமல்கோட், அன்னவரம், துனி, அனகாபள்ளி மற்றும் துவ்வாடா
வழிப்பாதை
[தொகு]வண்டி எண் 17487 [2] என்ற எண்ணுடன் செயல்படும் ரயிலானது திருப்பதியில் இருந்து இரவு 8.30 மணியளவில் புறப்பட்டு விசாகப்பட்டினத்தினை அடுத்த நாள் காலை 10.55 மணியளவில் சென்றடைகிறது.[3]
வண்டி எண் 17488 என்ற எண்ணுடன் செயல்படும் ரயிலானது, விசாகப்பட்டினத்தில் இருந்து மதியம் 2 மணியளவில் புறப்பட்டு திருப்பதியினை அடுத்த நாள் காலை 5.20 மணியளவில் சென்றடைகிறது.[4]
இந்திய ரயில்வேயின் பட்டியலில் இது அதிவிரைவுத் தொடருந்து வரிசையில் இடம்பெற்றுள்ளது. இது 25 ரயில் பெட்டிகளைக் கொண்டுள்ளது. இதில் 2 சரக்கு ரயில் பெட்டிகளும், 4 முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளும் (இந்த எண்ணிக்கை மாறக்கூடியது) அடங்கும். இரண்டு அடுக்கு, மூன்று அடுக்கு, படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பெட்டிகள் மற்றும் இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டிகள் இந்த ரயிலில் உள்ளன.
புள்ளி விவரம்
[தொகு]- உணவுச்சேவை பணம் செலுத்துவதை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.
- படுக்கை வசதிகளும் ரயில் சேவைகளில் அடங்கும்
- இருக்கை வசதிகளை முன்பதிவின் அடிப்படையில் தேர்வு செய்யமுடியும். ஆனால், முன்பதிவு செய்ய இயலாத இருக்கைகளுக்கு இது பொருந்தாது.
மாற்றுத் தொடருந்துகள்
[தொகு]இது முக்கியமான தொடருந்தாக இருந்தாலும், இது தவிர பிற தொடருந்து இயக்கப்படுகின்றன.
- நாராயணாத்ரி எக்ஸ்பிரஸ் – செகந்திராபாத் சந்திப்பில் இருந்து திருப்பதி வரை
- சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் – ஹசரத் நிசாமுதீன் ரயில்நிலையத்தில் இருந்து திருப்பதி வரை
- ராயலசீமா எக்ஸ்பிரஸ் – ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி வரை [5]
வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்:
[தொகு]எண் | நிலையத்தின்
பெயர் (குறியீடு) |
வரும்
நேரம் |
புறப்படும்
நேரம் |
நிற்கும்
நேரம் (நிமிடங்கள்) |
கடந்த
தொலைவு (கி.மீ) |
நாள் | பாதை |
---|---|---|---|---|---|---|---|
1 | விசாகப்பட்டினம்
(VSKP) |
தொடக்கம் | 14:00 | 0 | 0 கி.மீ | 1 | 1 |
2 | துவ்வாடா
(DVD) |
14:29 | 14:30 | 1 நிமி | 18 கி.மீ | 1 | 1 |
3 | அனகாபள்ளி
(AKP) |
14:44 | 14:45 | 1 நிமி | 34 கி.மீ | 1 | 1 |
4 | எலமஞ்சிலி
(YLM) |
15:04 | 15:05 | 1 நிமி | 58 கி.மீ | 1 | 1 |
5 | நர்சிப்பட்டினம்
சாலை (NRP) |
15:19 | 15:20 | 1 நிமி | 76 கி.மீ | 1 | 1 |
6 | டுணி
(TUNI) |
15:35 | 15:36 | 1 நிமி | 98 கி.மீ | 1 | 1 |
7 | அன்னவரம்
(ANV) |
15:49 | 15:50 | 1 நிமி | 114 கி.மீ | 1 | 1 |
8 | பித்தாபுரம்
(PAP) |
16:08 | 16:09 | 1 நிமி | 139 கி.மீ | 1 | 1 |
9 | சமல்கோட்
சந்திப்பு (SLO) |
16:21 | 16:22 | 1 நிமி | 151 கி.மீ | 1 | 1 |
10 | அனபர்த்தி
(APT) |
16:41 | 16:42 | 1 நிமி | 178 கி.மீ | 1 | 1 |
11 | துவாரபுட்டி
(DWP) |
16:47 | 16:48 | 1 நிமி | 182 கி.மீ | 1 | 1 |
12 | ராஜமுந்திரி
(RJY) |
17:15 | 17:20 | 5 நிமி | 201 கி.மீ | 1 | 1 |
13 | கொவ்வூர்
(KVR) |
17:32 | 17:33 | 1 நிமி | 209 கி.மீ | 1 | 1 |
14 | நிடதவோலு
சந்திப்பு (NDD) |
17:46 | 17:47 | 1 நிமி | 224 கி.மீ | 1 | 1 |
15 | தாடேபல்லிகூடெம்
(TDD) |
18:04 | 18:05 | 1 நிமி | 244 கி.மீ | 1 | 1 |
16 | பீமடோலு
(BMD) |
18:28 | 18:29 | 1 நிமி | 272 கி.மீ | 1 | 1 |
17 | ஏலூரு
(EE) |
18:41 | 18:42 | 1 நிமி | 291 கி.மீ | 1 | 1 |
18 | நுஸ்வுட்
(NZD) |
19:02 | 19:03 | 1 நிமி | 310 கி.மீ | 1 | 1 |
19 | விஜயவாடா
சந்திப்பு (BZA) |
21:00 | 21:15 | 15 நிமி | 351 கி.மீ | 1 | 1 |
20 | தெனாலி
சந்திப்பு (TEL) |
21:44 | 21:45 | 1 நிமி | 382 கி.மீ | 1 | 1 |
21 | நிடுப்ரோலு
(NDO) |
22:05 | 22:06 | 1 நிமி | 404 கி.மீ | 1 | 1 |
22 | பாபட்லா
(BPP) |
22:25 | 22:26 | 1 நிமி | 425 கி.மீ | 1 | 1 |
23 | சீராலா
(CLX) |
22:36 | 22:37 | 1 நிமி | 440 கி.மீ | 1 | 1 |
24 | ஒங்கோலு
(OGL) |
23:21 | 23:22 | 1 நிமி | 489 கி.மீ | 1 | 1 |
25 | காவாலி
(KVZ) |
00:06 | 00:07 | 1 நிமி | 555 கி.மீ | 2 | 1 |
26 | பிட்ராகுண்டா
(BTTR) |
00:21 | 00:22 | 1 நிமி | 571 கி.மீ | 2 | 1 |
27 | நெல்லூர்
(NLR) |
01:09 | 01:10 | 1 நிமி | 605 கி.மீ | 2 | 1 |
28 | குண்டூர்
சந்திப்பு (GDR) |
02:58 | 03:00 | 2 நிமி | 644 கி.மீ | 2 | 1 |
29 | வெண்டோடு
(VDD) |
03:24 | 03:25 | 1 நிமி | 663 கி.மீ | 2 | 1 |
30 | வெங்கடகிரி
(VKI) |
03:34 | 03:35 | 1 நிமி | 679 கி.மீ | 2 | 1 |
31 | ஸ்ரீ
காலஹஸ்தி (KHT) |
03:49 | 03:50 | 1 நிமி | 704 கி.மீ | 2 | 1 |
32 | ரேணிகுண்டா
சந்திப்பு (RU) |
04:38 | 04:40 | 2 நிமி | 727 கி.மீ | 2 | 1 |
33 | திருப்பதி
(TPTY) |
05:20 | முடிவு | 0 | 736 கி.மீ | 2 | 1 |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Train Time Table". indian rail info.
- ↑ "Indian Railways Passenger Reservation Enquiry". indian rail.
- ↑ "Runing Status". runing status.
- ↑ "Tirumala Express (17488)". cleartrip.com. Archived from the original on 2015-05-27.
- ↑ "Runing Status". runing train status.