திருமலைராஜன் ஆறு
(திருமலைராயன் ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
திருமலைராயன் ஆறு நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற பகுதிகளில் ஓடும் ஒரு ஆறாகும். இந்த ஆறு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திற்கு 2 கி.மீ தொலைவில் உள்ள ராஜகிரியில் காவேரியின் கிளை ஆறான குடமுருட்டி ஆற்றில் இருந்து பிரிகிறது . 5ஆம் நூற்றாண்டில் விஜய நகர அரசின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தவர் சாளுவத் திருமலை ராயன். தனது தலைநகரமான திருமலைராயன் பட்டினம் என்ற ஊரில் இம்மன்னர் வெட்டிய ஆறு திருமலைராயன் ஆறு எனப்படுகிறது[1]. திருமலைராயன்பட்டினத்தில் குடமுருட்டி ஆற்றின் இன்னொரு கிளையாறான முடிகொண்டான் ஆறு இதனுடன் சேர்கிறது.